தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்மாதிரி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

30 ல் 3 நாள்

பாத மசாஜ் செய்தலின் உண்மை அர்த்தம் 🦶

ஒருநாள், நானும் கேம்ரனும் சோபாவில் அமர்ந்துகொண்டிருந்தோம், அப்போது அவர் என் மடியின் மீது அவரது கால்களை வைத்தார். அவர் என்ன விரும்புகிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன் - பாதத்தை மசாஜ் செய்ய விரும்பினார்! சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் என்னிடம் திரும்பி, "இந்த மசாஜ் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை என்னால் வார்த்தையால் விவரிக்க முடியாது. நீ என் கால்களை மசாஜ் செய்யும்போது நான் மிகவும் நிம்மதியாகவும் நேசிக்கப்படுவதாகவும் உணர்கிறேன்" என்றார்.

இது ஒன்றும் புதிதல்ல - எங்கள் வீட்டில் பாத மசாஜ் செய்வது என்பது ஒரு வழக்கமான விஷயம்தான், ஏனென்றால் கேம்ரனுக்கு அது எவ்வளவு பிடிக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

அன்பை வெளிப்படுத்திக் காட்டுவது என்பது பெரும்பாலும் மிகவும் நடைமுறை விஷயங்களைச் செய்வதுதான் என்பது பொதுவான கருத்து. பாத மசாஜ் செய்வது என்பது ஒரு சிறிய உதாரணம்தான், ஆனால் நல்ல சமாரியனின் கதையோ மிகவும் அர்த்தமுள்ள அன்பின் செயல்களால் நிறைந்துள்ளது:

பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். (லூக்கா 10:33-35 TAOVBSI)

இவையே சமாரியன் அன்பு காட்டிய வழிகள்:

  1. அவன் மனதுருக்கமுடையவனாய் செயல்பட்டான். நாம் எத்தனை முறை மக்களைப் பார்த்து பரிதாபப்பட்ட பின்பும், அவர்களுக்காக சற்று நேரம் ஒதுக்கி உதவ முடியாத அளவுக்கு அலுவல் மிகுந்தவர்களாக சென்றுவிடுகிறோம்? 🏃🏻‍➡️
  2. அவன் நேரடியாக அங்கு இருந்தான். சில நேரங்களில் அன்பு என்பது தேவையான நேரத்தில் நாம் நேரில் சென்று நிற்பதை போன்ற ஒன்றாக இருக்கலாம். 🫂
  3. அந்த சமாரியன் அவனது காயங்கள் மீது எண்ணெய் வார்த்து, அதை ஆற்றும்படி கட்டு போட்டான். அன்பை நடைமுறையில் காட்டும் வழி இதை விட வேறு எதுவும் இல்லை! 🩹
  4. சமாரியன் அவனை ஒரு சத்திரத்துக்கு அழைத்துச் சென்றான். ஒருவரை நமது வாகனத்தில் ஏற்றிச்சென்று, அவர் செல்ல வேண்டிய இடத்துக்கு அவரைக் கொண்டுபோய் விடுவதன் மூலம் சிறிய அளவில் அன்பை வெளிப்படுத்திக் காட்ட முடியும்.🚕
  5. சமாரியன் அவனை கவனித்துக்கொண்டான். அவனுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கினான். நான் கேம்ரனுக்கு உணவு சமைத்துக்கொடுப்பதுதான், என் அன்பைப் பெற அவருக்குப் பிடித்தமான வழிகளில் ஒன்றாகும்.😁
  6. அவனுக்காக சமாரியன் பணம் கொடுத்தான். தேவையில் உள்ள ஒரு நபருக்கு, பணம் கொடுத்து உதவுவது, அன்பைக் காட்டுவதற்கான ஒரு எளிதான வழியாகும்.💰

இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது—இன்று நீங்கள் அன்பை வெளிப்படுத்திக் காட்டக்கூடிய ஒரு வழி எது? யாருக்கு அந்த அன்பு தேவைப்படுகிறது?

நீங்கள் ஒரு அதிசயம்!

Jenny Mendes

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net
 

சம்பந்தப்பட்ட திட்டங்கள்