ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்மாதிரி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

7 ல் 1 நாள்

படம் இன்னும் இருக்கிறது

இந்த வாரம் வேதாகமத்தில் எனக்குப் பிடித்த பெண்களில் ஒருவரைப் பற்றித் தியானித்து நாம் உற்சாகம் பெறுவோம். வேதாகமத்தில் உள்ள ஒரு புத்தகத்தின் பெயரை தனது பெயராகக் கொண்டிருக்கும் இரண்டு பெண்களில் ஒருவர்தான் இவர். இயேசுவின் வம்சவரலாற்றில் பெயர் குறிப்பிடப்பட்ட சில பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.

நீங்கள் சரியாக யூகித்துவிட்டீர்களா??.... அவள்தான் ரூத்!

ரூத் ஒரு குணசாலியான பெண் என்று விவரிக்கப்படுகிறாள் (ரூத் 3:11). மேலும் அவளிடமிருந்து நாம் அனைவரும் நிறைய காரியங்களைக் கற்றுக்கொள்ளலாம். ஆண்களும் கூட கற்றுக்கொள்ளலாம். அல்லது விசேஷமாக, ஆண்களாகிய நாம் தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூட சொல்லலாம். 🧐 😜

ரூத்தின் கதை அவருடைய மாமியார் நகோமியிலிருந்து தொடங்குகிறது. நகோமியின் வாழ்க்கை பின்னடைவுகளால் நிரம்பியிருந்தது. பஞ்சத்தினால் அவள் தன் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். தன் கணவனையும் தன் இரு மகன்களையும் இழந்து, அவள் இவ்வாறு சொல்லும் நிலைமைக்கு வந்தாள்:

"அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள்.” – (ரூத் 1:20-21)

நகோமி என்றால் 'இனிப்பு' என்று அர்த்தம், அதேவேளையில் மாராள் என்றால் 'கசப்பு' என்று அர்த்தம். நகோமியின் வாழ்க்கை முன்பு இனிமையானதாகவும் நிறைவானதாகவும் இருந்தது, ஆனால் பின் நாட்களில் கசப்பானதாகவும் வெறுமையானதாகவும் மாறிவிட்டது.

தன் மகன்களை இழந்த நகோமியின் வலி என்னுள் ஆழமாக பிரதிபலிக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஜாக் (zac) நோய்வாய்ப்பட்டபோது நாங்கள் அவனை இழந்துவிடவில்லை என்றாலும், அவனது மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் அவனது சரீரத்தின் சில பகுதிகள் செயலிழந்துவிட்டன. நகோமியைப் போலவே, ஆண்டவர் அற்புதமான விதத்தில் என் வாழ்வில் குறுக்கிடாதவரை, என் மகன் மீண்டும் நடப்பதையோ அல்லது அவனுடைய சொந்தக் குழந்தைகளைப் பெறுவதையோ என்னால் ஒருபோதும் பார்க்க முடியாது. இழப்பும் துயரமும் உட்கொள்வதற்கு கசப்பான மாத்திரைகள்.

ஆனாலும், ஒரு நம்பிக்கை இருக்கிறது. நகோமியின் கதைக் கசப்பானதாக முடியவில்லை; இது ஜாக்(Zac) உடனான எங்கள் வாழ்வின் முடிவு அல்ல, இது உங்கள் வாழ்வின் முடிவும் அல்ல.

போவாஸ் மற்றும் ரூத் மூலம், நகோமிக்கு ஓபேத் என்ற ஒரு பேரன் பிறந்தான். அவளது கணவர் மற்றும் மகன்களின் சந்ததியைத் தொடர்ந்து ஆண்டவர் ஆசீர்வதித்தார். அது மட்டுமின்றி, ஓபேத் தாவீதின் தாத்தாவாகவும், இயேசுவின் முன்னோர்களில் ஒருவராகவும் ஆனார்.

நகோமியின் வாழ்க்கை இவ்வாறு மாறியது:

  • விரக்தியிலிருந்து சந்தோஷம்
  • வெறுமையிலிருந்து பூரணம்
  • பாதுகாப்பின்மையிலிருந்து பாதுகாப்பு
  • கசப்பிலிருந்து மகிழ்ச்சி

ரூத் புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிற #1 பாடம் என்னவென்றால், நம் வாழ்வின் மிகவும் மோசமான அழிவுக்கு ஏதுவான காலங்களில் கூட நமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது.

அல்லது, நான் இவ்வாறு சொல்ல விரும்புகிறேன்:

"கதை முழுமையடையவில்லை என்றால் படம் இன்னும் இருக்கிறது."

நீங்கள் ஒரு அதிசயம்.

Cameron Mendes

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

வெளிப்புறத்தில் சாதாரண வாழ்க்கை வாழ்வதுபோல் தோன்றும் இந்த தைரியமான விவிலிய பெண்ணின் வாழ்க்கை உண்மையிலேயே தோல்விகளாலும், சோதனைகளாலும், அவளுக்கு எதிரான சூழ்நிலைகளாலும் நிறைந்திருதாலும் அவளுடைய விசுவாசமுள்ள கீழ்ப்படிதாலும் ஒப்புக்கொடுத்தலும் ஒரு முக்கியமான வரலாறுக்கு வழிவகுக்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-Lessons-from-the-Book-of-Ruth