ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படிமாதிரி

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

7 ல் 1 நாள்

உங்களுக்கு ஒரு செய்தி கொண்டுவந்திருக்கிறேன்…

வாழ்க்கையில் உங்களை உற்சாகப்படுத்தி முன்னோக்கி உந்தித்தள்ளுவது எது? உங்களை முன்னோக்கிச் செல்ல வைப்பது எது? நம் செயல்கள் மற்றும் ஆசைகளைத் தூண்டிவிடும் ஒன்றை நம் வாழ்க்கையில் நாம் பெற இருக்கிறோம், இயேசுவும் ஒரு காரியத்தைப் பெற்றிருந்தார்!

எபிரெயர் 12:2 இவ்வாறு கூறுகிறது, "அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்."

உண்மையில், 'இயேசுவுக்கு முன் வைத்திருந்த சந்தோஷம்' அவருக்கு மிகவும் வலுவான உந்துதலாக இருந்தது, அது எதையும் தாங்கிக்கொள்ள உதவியது, சிலுவையின் மீதான தமது மரணத்தைக்கூட தாங்கிக்கொள்ள அவருக்கு உதவியது.

எபிரெயர் நிரூபத்தில் சொல்லப்பட்ட, ‘தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு’ என்ற இந்த சொற்றொடரின் அர்த்தம் என்ன?

உங்களுக்கான ஒரு செய்தியை நான் வைத்திருக்கிறேன்... அது நீங்கள்தான்! 😃

நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பு, மற்றும் ஆண்டவரோடு நாம் ஒப்புரவாகுதல் (ரோமர் 5:8-11) மற்றும் தமது மணவாட்டியாக நம்மை மாற்றி, நம்முடன் நித்தியத்தை செலவிடுவதற்கான வாய்ப்பை ஆண்டவர் நமக்கு வழங்குதல் ஆகியவைதான் இயேசுவுக்கு முன்பாக வைக்கப்பட்ட சந்தோஷம். (எபேசியர் 5:25-27).

"கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.” (கலாத்தியர் 2:20)

இயேசு நம்மீது வைத்திருக்கும் அன்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியாது. இப்போது, பதிலுக்கு, நாமும் அவரை விடாமல் நேசிக்கக் கூடியவர்களாய் இருக்கிறோம்!

"நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்." (தீத்து 2:13-14)

நாம் செய்யும் எல்லாவற்றிலும் நாம் முழுவதுமாக ஆண்டவரிடத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்; ஏனென்றால், அவர் நம் பாவங்களுக்காக மரிக்கும் அளவிற்கு கூட தம்மை நமக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தார்.

இந்த வாரம், எதுவும் நம்மைத் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி என்பதை நாம் சேர்ந்து தியானிப்போம் 💪🏽

நீங்கள் ஒரு அதிசயம்

Jenny Mendes

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

உங்கள் வாழ்க்கையிலும் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் ஆண்டவர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த உங்களைத் தடுத்து நிறுத்தமுடியாத ஒரு நபராக மாற்றும் ஏழு குணங்களைக் கண்டறிய இந்த ஒரு வாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-How-to-be-unstoppable-for-God