மனஅழுத்தம்மாதிரி

நீ விசேஷித்த மற்றும் விலையேறப்பெற்ற நபர் ⭐️
நீ எப்போதாவது உன்னைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களுக்கு இடமளித்திருக்கிறாயா? அப்படியானால், நீ ஆண்டவருடைய பார்வையில் எவ்வளவு விலையேறப்பெற்ற நபர் என்பதை இந்த சிறிய வசனத்தின் மூலம் நான் உனக்கு நினைவூட்ட விரும்புகிறேன்: "நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்." (1 கொரிந்தியர் 7:23)
தகுதியற்ற ஒருவருக்காக ஆண்டவர் தம்முடைய ஒரேபேரான குமாரனை பலியாக ஒப்புக்கொடுத்தார் என்று நீ உண்மையிலேயே நினைக்கிறாயா? நிச்சயமாக இல்லை! இயேசு உன்னை இரட்சிக்கவே மிக அதிக விலைக்கிரயம் செலுத்தினார்: அவருடைய விலையேறப்பெற்ற இரத்தம் சிலுவையில் சிந்தப்பட்டது.
- கடந்த காலங்களில் உன்னை இழிவுபடுத்தும் மற்றும் அவமானப்படுத்தும் வார்த்தைகள் உனக்கு விரோதமாக சொல்லப்பட்டதா?
- நீ இப்படிப்பட்ட நபர் என்று மற்றவர்கள் உன்னை முத்திரை குத்திவிட்டார்களா?
- நீ சில சமயங்களில் கேலிபண்ணத்தக்க தோற்றம் அல்லது பரியாச வார்த்தைகளுக்கு இலக்காகியிருக்கிறாயா?
எனது மின்னஞ்சல் வாசகர்களில் ஒருவர் தனது அனுபவத்தை என்னோடு இவ்வாறு பகிர்ந்துகொண்டார்: “கர்த்தர் எனக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை குறைத்து மதிப்பிடாமல், என்னை நம்புவது எனக்குக் கடினமாய் இருப்பதுதான் எனக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. நான் சிறுவனாக இருப்பதால், ‘ஓரளவே உன்னால் செய்ய முடிகிறது,’ ‘பரவாயில்லாமல் சராசரியாக செய்கிறாய்,’ ‘இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்’ என்பன போன்ற வார்த்தைகளை மட்டுமே நான் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் இந்த எதிர்மறையான வார்த்தைகளை எதிர்த்துப் போராடி முன்னேறிச் செல்ல விரும்புகிறேன்."
ஒருவேளை நீ தொடர்ந்து அதிகமான காரியங்களைச் செய்ய பாடுபட்ட பின்பும், மற்றவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம்.
ஆண்டவர் உன்னை நேசிப்பதுபோல், நீயும் உன்னை நேசிக்க வேண்டிய நேரம் இது. இந்த எதிர்மறையான எண்ணங்களையும் இழிவான எண்ணங்களையும் விரட்டியடிக்க வேண்டிய நேரம் இதுவே. சிலுவையில் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தின் விலைக்கிரயத்தை நினைத்து நீ அவருக்குச் சொந்தமான நபராக இருக்க முடியும்! அவர் உன்னை அன்பினால், அசாதாரண ஆற்றலுடன் சிருஷ்டித்தார்.
நீ அவர் மீது அளவிட முடியாத மதிப்பு வைத்திருக்கிறாய். நீ விசேஷித்த நபர் மற்றும் அற்புதமான நபர்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

வாழ்க்கை என்பது ஒவ்வொரு நபரும் கிட்டத்தட்ட சகிப்புத்தன்மையுடனும் விடாமுயற்சியுடனும் போராடி மேற்கொள்ளும் ஒரு பந்தயமாகும். சில சமயங்களில், குடும்பம், திருமணம், வேலை, போன்றவற்றிற்கு நாம் ஆற்ற வேண்டிய சகலவித கடமைகளாலும் நாம் நெருக்கப்பட்டு, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல், போட்டியிட்டு வெற்றி பெற செயல்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம், அதனால் ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நாம் இழக்க நேரிடலாம். இந்தத் திட்டத்தில், இப்படிப்பட்ட நெருக்கடிகளை மேற்கொண்டு, ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் சமாதானம் மற்றும் சந்தோஷத்தால் நிரப்பப்படுவது எப்படி என்பதை நாம் காண்போம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=HowtoresistPressure
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்
