'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்மாதிரி

தொடர்ந்து நீந்து, நீந்திக்கொண்டே இரு 🐠
"நீமோவைத் தேடுதல்" என்ற கதையைக் கேட்டிருக்கிறாயா?
தொலைந்துபோன தன் மகனான நீமோவைக் கண்டுபிடிக்க சாகசப் பயணத்தைத் தொடங்கும் மார்லின் என்ற மீனின் இதயத்தைத் தூண்டும் கதைதான் இது. வழியில், அது நினைவாற்றல் இழப்புதன்மை கொண்டதும் நம்பத்தக்கதுமான டோரி என்ற ஒரு மீனுடன் நட்புக்கொள்கிறது. குறிப்பாக மனச்சோர்வடைந்த ஒரு தருணத்தில், டோரி மார்லினை ஊக்கப்படுத்தியது, "வாழ்க்கை உன்னை விழப்பண்ணும்போது, நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டு, "நீச்சலடித்துக் கொண்டே இரு, நீந்திக்கொண்டே இரு, நீச்சல் அடி, நீந்து" என்று பாடல் பாடி உற்சாகப்படுத்தியது.
நீமோவைக் கண்டுபிடித்தலின் இந்தக் காட்சி எனக்கு பிலிப்பியர் 3வது அத்தியாயத்தை ஞாபகப்படுத்துகிறது. இந்த அத்தியாயத்தில், பவுல் ஆண்டவருடைய மகிமையைப் பின்தொடர்வதற்கும், இயேசுவை அறிந்துகொள்வதற்கும், அவரைப் போல மாறுவதற்கும், தான் ஒரு காலத்தில் நேசித்த அனைத்தையும் - அதாவது, தனது சாதனைகள், நீதியான செயல்கள் மற்றும் பாரம்பரியத்தை - விட்டுவிட்டதைப் பற்றிப் பேசுகிறார்.
"சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி" என்று எழுதுவதன் மூலம் பவுல் தாழ்மையுடன் இதை அறிக்கையிடுகிறார். (வசனம் 13)
இன்றைய நாளின் ‘தேவையானது ஒன்று’: பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடுவதுதான்; அல்லது, டோரியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், "நீந்து, நீச்சல் அடி, நீந்திக்கொண்டே இரு."
"முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்." (ஏசாயா 43:18)
"கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல." (லூக்கா 9:62)
நாம் அனைவரும் சில சமயங்களில் டோரியைப் போலவே இருக்க வேண்டும், கடந்த காலத்தை மறந்து, முன்னோக்கிப் பார்க்க வேண்டும், கிறிஸ்து இயேசுவில் ஆண்டவர் நமக்காக வைத்திருப்பதைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும்.
"நாம் பின்னால் விட்டுச்செல்லும் எதையும் விட, மிக சிறந்த விஷயங்கள் நமக்கு முன்னால் காத்துக்கொண்டிருக்கின்றன" என்று சி.எஸ். லூயிஸ் என்பவர் கூறுகிறார்.
பவுலின் வார்த்தைகளைப் பற்றிச் சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குவாயா? உனக்குப் பிடித்த விஷயங்கள் எது என்று சற்று யோசித்துப்பார், அவற்றை விட்டுவிடுமாறு ஆண்டவர் உன்னைப் பார்த்துக் கேட்கிறார். அவற்றை எழுதி, அந்தப் பட்டியலை உன் கையில் எடுத்துக்கொண்டு, ஆண்டவரை பார்த்து சொல், ‘ஆண்டவரே, உமது நிமித்தம் இவற்றை விட்டுவிடுகிறேன். என் கடந்த காலத்தை நான் பற்றிக்கொண்டிருக்க விரும்பவில்லை, அதை உம்மிடம் விட்டுவிடுகிறேன், ஆமென்!’
நீ ஒரு அதிசயம்!
Cameron Mendes
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.
இந்த திட்டத்தைப் பற்றி

"ஒன்று மட்டுமே" என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள ஐந்து பத்திகளை ஆராய்வோம். இது நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கான 5 முக்கியம் வாய்ந்த விஷயங்களை முன்னிலைப்படுத்த உதவும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=FiveTimesGodSaysDoOneThingintheBible
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவர் சர்வவல்லவர்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்
