ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்மாதிரி

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

5 ல் 2 நாள்

நாள் 2: பிரிக்கப்படாத வீடு

இயேசு சாத்தானின் சக்தியால் அதிசயங்களை செய்கிறார் என்று பரிசேயர்களால் குற்றம் சாட்டப்பட்ட போது இயேசு அவர்களின் சிந்தனைகளை அறிந்து, "தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாகும்; தனக்குத் தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த நகரமும் அல்லது வீடும் நிலைக்காது," என்றார்.மத்தேயு 12:25 .

இதுவே திருமணம் மற்றும் குடும்பத்திற்கான ஆழமான உண்மை. பிரிவினை திருமண பந்தத்தை வலுவிழக்க மற்றும் சீர்குலைக்கச் செய்யும்

சாத்தான் மற்றும் சுயம் திருமணத்தின் இரண்டு எதிரிகளாகும். திருமணத்தில் இருவரும் பிரிவினையை ஏற்படுத்தி விடாதபடி கவனமாக இருக்க வேண்டும். எதிராளி தன் சூழ்ச்சியினாலும், பொய் பேசும் குணத்தினாலும் பிரிவினையை உண்டாக்குவான்.ஆணும் பெண்ணும் ஒன்றாக இருப்பார்கள் என்று தேவன் கூறும்போது,எதிரியானவன் அவர்களை உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்வு ரீதியாக மற்றும் ஆவிக்குரிய ரீதியில் என எல்லா வகையிலும் இரண்டு வெவ்வேறு நபர்களாக பிரிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வான். இதை அடைய, எதிரி தனது பழைய உத்திகளைப் பயன்படுத்துவான். அவற்றில் ஒன்று நாம் கண்டுணர முடியாத முறையில் பொய்களைப் பேசுவான். அது கிட்டத்தட்ட உண்மை போல் இருக்கும். "தேவன் உண்மையில் சொன்னாரா" என்ற கேள்வியை சாத்தான் ஏவாளிடம் எழுப்பினதுபோல இன்றும் அதையே எழுப்புகிறான். வேதாகமம் உண்மையில் அப்படிச் சொல்கிறதா?

உதாரணமாக: தேவனுடைய வார்த்தை, 'மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு' என்று கூறும்போது, சாத்தான், ‘உன் பெற்றோரைக் கனப்படுத்துவாயாக’ என்ற வேதத்தை மேற்கோள் காட்டி நம்மைக் குழப்புவான்.உங்கள் துணையை 'பிரத்தியேக துணையாக' வைத்துக் கொள்வதற்குப் பதிலாக சாத்தான் சொல்வான் - உங்களின் அனைத்து அந்தரங்க விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய மற்ற நெருங்கிய நண்பர்களும் உங்களுக்குத் தேவை. உங்கள் மனைவியுடன் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளும்போது, உங்கள் மனைவியிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டியதில்லை, உனக்கென்று உனக்கான தனி இடம் தேவை என்று எதிரி கூறுவான்.நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

சாத்தான் பயன்படுத்தும் மற்றொரு உத்தி நமது வாழ்க்கைத் துணையின் குறைகளை பெரிதுபடுத்துவது. அவன் நமது வாழ்க்கைத் துணையைப் பற்றிய எதிர்மறையான விஷயங்களைப் பேசுவான். சில நேரங்களில் அது நம்பகமாகத் தோன்றக்கூடிய எடுத்துக்காட்டுகளை ஆதாரமாகக் கொடுப்பான்.

எனவே, எதிரியின் குரலைக் கேட்காமல், ஆண்டவர் எனது வாழ்க்கைத்துணையைப் பற்றிச் சொல்வதைக் கேட்க என் காதுகளைத் திறக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கைத்துணையை கிறிஸ்து காண்பதைப் போலவே காண வேண்டும் - நாம் கிறிஸ்துவினுடைய பிள்ளைகள் (ரோமர் 8:17).

சாத்தான் பொய்யன் மற்றும் மோசடி செய்பவன் என்பதால், அவனின் குரலை அடக்கி, ஆண்டவருடைய குரலைக் கேட்க அனுமதிக்க வேண்டும்.

சுய-மையம் மற்றும் சுயநலம் திருமணத்தில் பிளவை ஏற்படுத்தும். இது சண்டையை விளைவித்து, திருமணத்தை நொறுக்கச் செய்து, முறித்துவிடும். தொடர் சண்டைகள் மற்றும் விவாதங்கள், பேசாமல் தண்டிப்பது அல்லது ஆக்ரோஷமான நடத்தைக்கு வழிவகுக்கும். சண்டையின் அடிப்படையில், 'சுயம்- சுயநலம், சுய திருப்தி, சுய-மையம்' (யாக்கோபு 4:1,2) என்பதை காண முடியும்.

ஆண்டவருடைய உதவியுடன், நம் வாழ்க்கைத்துணையுடன் அமைதியாக வாழ அனைத்தையும் செய்ய வேண்டும். நம் துணையை விரைவாக மன்னிக்கவும், விடுவிக்கவும் மற்றும் ஆசீர்வதிக்க தயாராக இருக்க வேண்டும். இயேசு சிலுவையில் அனைத்து பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்துவிட்டார் என்பதை நம்ப வேண்டும் (எபேசியர் 2:14).

ஒருமனப்பாடு இல்லை என நீங்கள் உணர்ந்தால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை ஆண்டவரிடத்தில் ஒப்படைக்கத் தொடங்குங்கள், பின்னர் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஜெபம் செய்யுங்கள். நீங்கள் ஜெபிக்கும் பொழுது, தேவன் தனது பணியைச் செய்வார். சிலுவையின் வலிமைக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை.

ஜெபம் : அன்பான தந்தையே, என் திருமணத்தில் உள்ள ஒவ்வொரு பிளவுச் சுவரையும் உடைக்க உங்களை அழைக்கிறேன். எதிரி உருவாக்கிய பிளவுகளைப் பார்க்க என் கண்களைத் திறந்தருளும். எனது சுய-மையம் மற்றும் சுயநல நடத்தையால் பலமுறை பிரிவினைக்கு காரணமாக இருந்ததற்காக என்னை மன்னியுங்கள். என் வாழ்க்கைத் துணைக்காகவும் மற்றும் குழந்தைகளுக்காகவும் என் இதயத்தை உமது அன்பால் நிரப்பும். இயேசுவின் நாமத்தினாலே ஆமென்.

இந்த திட்டத்தைப் பற்றி

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம் "அவர்கள் இருவராயிராமல் , ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்,தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்" (மத்தேயு 19:6) மற்றும் "அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24) என்ற கடவுளுடைய வார்த்தை கணவன் மனைவிக்கிடையேயான ஒருமனப்பாட்டை திருமணத்திற்கு அடிப்படையாக வலியுறுத்துகிறது . இருப்பினும், ஆணும் பெண்ணும் தங்கள் சுய முயற்சியால் ஒன்றாக மாற முடியாது. பரிசுத்த ஆவியானவர் மற்றும் ஆண்டவருடைய வார்த்தையினால் ஈர்க்கப்பட்ட திறன்கள் தேவை ,மாறாக உலக ஞானத்தால் அல்ல. 'ஒருமனப்பாடு ' பற்றிய ஆண்டவரின் வார்த்தையை நாமும் ஆராய்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய SOURCE க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sourceformarriage.org