இனியும் பயத்தில் வாழவேண்டாம் மாதிரி

உன் விருப்பத் தேர்வுகளை பயத்தினால் தவறாகத் தேர்ந்தெடுக்கப் போகிறாயா?
"கோபம் ஒரு மோசமான ஆலோசகர்" என்ற சொற்றொடரை நீ கேள்விப்பட்டிருப்பாய் என்று நான் நம்புகிறேன்... பயமும் அப்படித்தான் என்பது உனக்குத் தெரியுமா?
வேதாகமத்தில் மத்தேயு 25:14-30-ல், ஒரு மனிதனைப் பற்றி இயேசு சொன்ன உவமையை நாம் வாசிக்கலாம். அவன் தூர தேசத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால், தனது உடைமைகளை நிர்வகிக்கும் பொறுப்பை வேலைக்காரர்களிடம் ஒப்படைத்தான். அவன் திரும்பி வந்தபோது, அவனுடைய வேலைக்காரர்கள் அனைவரும் வியாபாரம் செய்து, முதலில் கொடுக்கப்பட்டதைவிட அதிக வருமானங்களை ஈட்டி தாலந்துகளைப் பெருக்கி வைத்திருந்தார்கள். ஒருவன் மட்டும் அப்படிச் செய்யவில்லை! அவன் தன் எஜமானிடம், "ஆகையால், நான் பயந்து போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; ..." என்றான் (மத்தேயு 25:25). இந்த வேலைக்காரன் பொல்லாதவன் மற்றும் சோம்பேறி என்று அழைக்கப்பட்டு, புறம்பாக்கப்படுகிறான்.
இந்த உவமையில், வேலைக்காரன் அப்படியொரு முடிவை எடுத்ததற்கான காரணம், அவனது பயமே என்பதை நாம் காணலாம். நீ பயத்தில் செயல்படும்போது, நல்ல முடிவுகளை எடுக்க முடியாது. உன்னால் ஜெபிக்க முடியாது, சிந்திக்க முடியாது; ஏனென்றால் நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்குச் சொல்வது உன் பயம்தான். பயத்தால் நீ எடுக்கும் தீர்மானமே உன் பயத்துக்கு ஆதாரமாகிவிடுகிறது.
ஆண்டவருடைய பிள்ளையாக இருக்கிற உன்னையும், உனது நடத்தையையும் பயம் ஒருபோதும் வழிநடத்திச் செல்லாது என்று நான் நம்புகிறேன். தீர்மானம் எடுப்பதற்கு முன்பு, தேவனைத் தேடுவதற்கு நேரம் ஒதுக்கு. உன் பயத்தை அவர் வசம் விட்டுவிட்டு, அவருடைய ஆலோசனையைக் கேள். என்ன செய்ய வேண்டும், எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் காண்பிக்கும்படி அவரிடம் கேள்!
நான் உனக்கு அடிக்கடி சொல்கிறேன்... மிகச்சிறந்த தேர்வு யாதெனில், எப்போதும் ஆண்டவரைச் சார்ந்து வாழ்வதாகும்! எப்போதும் அவருடைய சித்தத்துக்கு ஏற்பவும், சத்தியத்துக்கு ஏற்பவும் உடன்படிக்கையின்படியும் வாழ்வதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்று, பயத்தை அடிப்படையாக வைத்து முடிவெடுக்காமல், உன் கையை அவருடைய பாதத்திலும், அடிச்சுவடுகளிலும் வைக்குமாறு நான் உன்னை ஊக்குவிக்கிறேன்.
பெலத்துடனும் தைரியத்துடனும் இரு! பயப்படாதே! இயேசு உன்னோடு இருக்கிறார்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

பயம் மற்றும் பதட்டத்தை கையாள்வது உனக்கு கடினமாக இருக்கலாம். பயத்தைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது மற்றும் உன் பயத்தை நீ எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி இங்கே விரிவாக காணலாம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=fear
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்
