உன் நேரத்தை சரியாக நிர்வகிப்பது எப்படி?மாதிரி

உன் நேரத்தை நிர்வகிப்பது எப்படி? 🕔
நேரம் என்பது உனது விலைமதிப்பற்ற வளங்களில் ஒன்றாகும். அதை புத்திசாலித்தனமாக நிர்வகிக்கும்போது, அது ஆரோக்கியமான திருமணத்திற்கும், ஒரு நல்ல குடும்ப உறவிற்கும், ஆண்டவருக்குள் வளர்வதற்கும் மிகப்பெரிய சொத்தாக இருக்கும். இருப்பினும் அதை சரியான வழியில் பயன்படுத்துவது எப்படி என்று நமக்கு அதிகம் கற்பிக்கப்படுவதில்லை.
'அனுதினமும் ஒரு அதிசயத்தின்' வாசகர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “எனது நாளைத் தொடங்கும் முன் ஆண்டவரின் அறிவுரைகளைக் கேட்கவும், ஜெபிக்கவும், அவருக்குச் செவிசாய்க்கவும், காலையில் நேரத்தை ஒதுக்க முடியாததால் நான் விரக்தியடைகிறேன். அந்த நாளின் எந்த நேரத்திலும் நான் அவருடன் பேசுவதையும், அவர் என்னுடன் பேசுவதைக் கேட்பதையும் இது தடுப்பதில்லை. ஆனாலும் இது தவிர, ஒரு அர்ப்பணிப்பின் நேரத்தை ஒதுக்கவே நான் விரும்புகிறேன்.”
நீயும் உனக்குள் இன்றுவரை இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கலாம்: “எனது வேதாகமத்தை அதிகமாகப் படிக்கவும், என்னைக் கவனித்துக்கொள்ளவும், என் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நிறைய நேரத்தை செலவிடவும் நான் உண்மையிலேயே விரும்புகிறேன். ஆனால் என் வாழ்க்கை இப்படி இருக்கிறது; நேரமில்லாததால் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு விலைமதிப்புள்ளதாகத் தெரிகிறது."
“நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்" என்று வேதாகமம் சொல்கிறது. (சங்கீதம் 90:12)
நல்ல செய்தி என்னவென்றால், நேரத்தை நிர்வகிப்பதை உன்னால் கற்றுக்கொள்ள முடியும்! இது சாதாரணமான ஒன்று அல்ல; இயற்கையாக ஒழுங்கு முறைப்படி செயல்படுபவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்று சொல்ல முடியாது. உண்மையில், உன் முழு வாழ்க்கையும் நேரத்தை மையமாக வைத்தே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று உனக்குத் தெரியாவிட்டால், முக்கியமானவற்றை நீ தவறவிடக் கூடும்.
கந்தால்ஃப் என்பவர் ஒரு சிந்திக்கக் கூடிய கருத்தை சொல்லியிருக்கிறார். அது: "நமக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டியதுதான் நமது வேலை."
ஒருவேளை நம்மிடம் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதை நம்மால் சரியாகத் தீர்மானிக்க முடியாமல் போகலாம். ஆனால் நலமானவைகளைச் செய்ய நேரத்தைப் பயன்படுத்தும் பொறுப்பை ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.
எனவே, இந்த வாரம் முழுவதும், நமது நேரத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதற்கான வெவ்வேறு திறவுகோல்களை நாம் சேர்ந்து தியானிக்கப் போகிறோம்!
என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்… “ஆண்டவரே, என் நாட்களை புத்திசாலித்தனமாக எண்ண எனக்குக் கற்றுக்கொடுப்பீராக. நான் இதுவரை காலத்துக்கு எதிரான ஓட்டப் பந்தயத்தில் ஒடுவதுபோல் வாழ்ந்து வருகிறேன், எப்படியாவது எனது செயல்பாடுகளையும் எனது விருப்பங்களையும் பரபரப்பான அட்டவணைக்குள் உள்ளடக்க முயற்சிக்கிறேன். ஆனால், இந்த வாரம், உமது கொள்கைகளுக்கு ஏற்ப என் நேரத்தைப் பயன்படுத்த உதவும் ஞானத்திற்கு நேராக நீர் என்னை அழைத்துச் செல்ல வேண்டுமென நான் ஜெபிக்கிறேன்."
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

எனது வேதாகமத்தை அதிகமாகப் படிக்கவும், என்னைக் கவனித்துக்கொள்ளவும், என் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நிறைய நேரத்தை செலவிடவும் நான் விரும்புகிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் நேரமில்லையே என்று யோசித்துக்கொண்டிருக்கிறாயா? நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று உனக்குத் தெரியாவிட்டால், முக்கியமானவற்றை நீ தவறவிடக் கூடும். உன் நேரத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது என்பதை நீ அறிய விரும்பினால், இந்த வார்த்தைகளைத் தியானித்து பயனடைவாயாக!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=howtomanageyourtime
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

ஆண்டவருடைய கணக்கு

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி
