பாரத்தை வைத்து விடுங்கள்மாதிரி

வழி காட்டும் கடவுள்
வழிகளிலே நின்று, …நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள். - எரேமியா 6:16
என் கணவர் அநேக நாட்கள் நோய்வாய்ப்பட்டு, நோய் அதிகரித்ததால், அவசர சிகிச்சை தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. உடனடியாக மருத்துவமனை அவரை அனுமதித்தது. நாட்கள் சென்றது. அவர் மேம்பட்டார், ஆனால் மருத்துவமனையிலிருந்து வெளியேற போதுமானதாக இல்லை. எனது கணவருடன் தங்குவதா அல்லது பலர் மற்றும் திட்டங்கள் நிறைந்த முக்கியமான பணி பயணத்தை நிறைவேற்றுவதா என்ற கடினமான தேர்வை நான் எதிர்கொண்டேன். அவர் நலமாக இருப்பார் என்று என் கணவர் உறுதியளித்தார். ஆனால் அவருக்கும் என் வேலைக்கும் இடையே என் இதயம் தத்தளித்தது.
கடவுளின் மக்களுக்கு வாழ்க்கையின் முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நிலையில் அவருடைய உதவி தேவைப்பட்டது. பெரும்பாலும், அவர்கள் ஏற்கனவே வெளிப்பட்ட அவருடைய அறிவுறுத்தல்களை கடைபிடிக்கவில்லை. எனவே மோசே தனது கட்டளைகளைப் பின்பற்றி "ஜீவனைத் தெரிந்தெடுக்க" மக்களை கெஞ்சினார் (உபாகமம் 30:19). பிற்பாடு, எரேமியா தீர்க்கதரிசி, திசைமாறிய மக்களுக்கு கடவுளுடைய வழிநடத்தும் வார்த்தைகளை வழங்கினார், அவருடைய வழிகளைப் பின்பற்றும்படி அவர்களை ஊக்கப்படுத்தினார்: “வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்" (எரேமியா 6:16). வேதத்தின் பூர்வ பாதைகளும் கடவுளின் கடந்தகால ஏற்பாடும் நம்மை வழிநடத்தும்.
என்னை, நான் முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு எரேமியாவின் ஞானத்தின் மாதிரியை பயன்படுத்தினேன். என் கணவருக்கு நான் தேவைப்பட்டது போலவே என் வேலைக்கும் தேவைப்பட்டேன். அதே நேரத்தில், என் மேற்பார்வையாளர் என்னை அழைத்து, வீட்டிலேயே இருக்கும்படி ஊக்கப்படுத்தினார். நான் ஒரு மூச்சை இழுத்து, கடவுளின் ஏற்பாடுக்காக நன்றி தெரிவித்தேன். கடவுளின் வழிநடத்துதல் எப்போதும் அவ்வளவு தெளிவாக வருவதில்லை, ஆனால் அது வருகிறது. நாம் முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நிலையில் நிற்கும்போது, அவரைத் தேடுவதை உறுதி செய்வோம்.
எலிசா மோர்கன்
அன்புள்ள கடவுளே, நான் நிச்சயமற்ற நிலையில் இருக்கும்போது, முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நிலையில் நின்று, உமது ஏற்பாட்டைத் தேட எனக்கு உதவுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் கடவுளை அவருடைய கிருபைக்காகப் புகழ்ந்தாலும் சரி, உங்கள் விசுவாசத்துடன் மல்யுத்தம் செய்தாலும் சரி, கடவுள் எப்போதும் தம்முடைய மாறாத அன்பு, உண்மை மற்றும் பலத்தால் உங்களைச் சந்திப்பார். அவர் இருக்கிறார், எப்போதும் போதுமானவராக இருப்பார் என்று நம்புவதன் மூலம் கடவுளிடமும் ஒருவருக்கொருவரும் நெருக்கமாக வளர உறுதிபூண்டுள்ள பெண்கள் சமூகத்தில் அடியெடுத்து வைக்கவும்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்
