எல்லாம் புதிதாயினமாதிரி

All Things New

5 ல் 4 நாள்

நான் 2 கொரிந்தியரை வாசிக்கும்போதெல்லாம் என்னை தனிப்பட்டரீதியில் சவாளித்தது ஒன்று என்னவென்றால், பவுல் கடினமான உறவுகளைக் குறித்து பேசவோ அல்லது அவற்றிலிருந்தோ தயங்கவேயில்லை. அதைக்குறித்து நாம் பிறகு பார்ப்போம் ஆனால், கொரிந்துவின் மக்கள் பவுலுக்கு விரோதமாக அநேக பிரச்சனைகளைக் கொண்டிருந்தார்கள், அவர் வருவேன் என்று சொல்லியிருந்தும் அந்த நேரத்தில் கொரிந்துவிற்கு வராமலிருந்தது அதில் ஒன்றாக இருந்தது. ஆனால் பவுல் அவரின் செய்கைக்கு விளக்கம் அளிப்பதற்கு முன்பே அவர்களிடம் தன் இருதயத்தை நிலைநிறுத்துகிறார்.

1 கொரிந்தியரில் சபையானது பவுலுக்கு சரியாக பிரதிகிரியை செய்யவில்லை. பவுலுடைய உடன்-ஊழியக்காரன் தீமோத்தேயு பவுல் அந்த நிரூபத்தை எழுதியப்பிறகு கொரிந்தியரை சென்று சந்தித்து, அங்கு - சன்மார்க்க பிரச்சனைகள், தவறான நம்பிக்கைகள் மற்றும் குழுக்களாக பிரிந்து இருந்த ஒரு நிலை போன்ற அநேக பிரச்சனைகளைக் குறித்து அறிவித்திருந்தான். அதன் காரணமாக பவுல் எபேசுவிலிருந்து கொரிந்துவிற்கு கப்பலேறி மக்களை நேரடியாக சந்திக்கும்படியாக வந்தார். அதை ஒரு "துக்கமான சந்திப்பு" என்று பிறகு 2 கொரிந்தியர்: 2:1-2-இல் குறிப்பிட்டார்.

இன்றைய வாசிப்புப்பகுதி பவுல் வராமல் இருந்ததன் நோக்கத்தை கொரிந்தியர்கள் கேள்விகேட்டார்கள் என்று காட்டுகிறது. பவுல் அவர்களை அன்பாய் நேசித்தாலும், அவருடைய அன்பின் உண்மையான சுபாவத்தை சந்தேகத்திற்குள்ளாகும்படியாக சில எதிரணியான மக்கள் கொரிந்து சபையை குழப்பிவிட்டிருந்தனர். எனக்கோ இதுதான் மிகவும் மோசமான ஒரு செயலாக உணருகிறேன். தவறாக புரிந்துகொள்ளப்பட எனக்கு கொஞ்சமும் பிடிக்காது, அதுவும் விசேஷமாக மற்றவர்களுக்காக நான் தியாகம் செய்து அவர்களுக்காக நின்று என்னை வளைத்து உதவி செய்யும் அந்த சூழ்நிலைகளில். இது எனக்கு பெரும்பாலும் நடக்கிறது என்று சொல்லமாட்டேன், ஆனால் அவ்வாறு நடக்கும்போது இந்த 2 முடிவுகளையே கொண்டு நான் போராடுவேன் - 1. தேவனுக்கு முன்பாக நான் கொண்டிருக்கும் நல்மனசாட்சியை வைத்துக்கொண்டு அதில் இளைப்பாறுகின்றேனா (வசனம் 12)? 2. என்னை குற்றம்சாட்டினவர்களை என்னால் தொடர்ந்து நேசிக்கமுடியுமா?

நீ ஒரு காரியாதைக்குறித்து தற்காப்பாக இருக்கின்றாய் என்று ஒருவர் சொன்னால் அது முற்போக்காக சொல்லும் காரியமாக இருக்காது. நாம் அமைதியாக இருந்து நம்மை நியாயப்படுத்தாமல் இருப்பதுதான் ஒரே தேவபயமுள்ள பிரதிகிரியையாக இருக்கமுடியும் என்று நினைக்கலாம். (நீதிமொழிகள் 9:8 பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே என்று சொல்கிறது). ஆனால் சில சமயங்களில் நம்மை நியாயப்படுத்திக்கொள்வது தேவையான ஒன்றுமாத்திரம் அல்ல, அது நம் உறவிற்கு மிகவும் அத்தியாவசியமானது. உன்னை நியாயப்படுத்தவேண்டுமா வேண்டாமா என்று நீ எப்படி அறிந்துகொள்வது? நான் உபயோகிக்கும் பரிசோதனை இதுதான்: என்னை நியாயப்படுத்துவது தற்காப்பினால் உண்டாகி, பெருமை, கோபம், பயம் அல்லது சுயநீதியினால் நிறைந்து இருந்தால், அது பெரும்பாலும் மாம்சத்தினால் உண்டானது. மாறாக, என்னை நியாயப்படுத்துவது மற்ற நபரின்மீது அன்பினால் உண்டாகி, தெளிவு, தாழ்மை, கருணை மற்றும் அன்பினால் நிறைந்து இருந்தால், அது ஆவியினால் உண்டானது. பவுலும் இந்த முழு நிரூபத்திலும் அவரை தற்காப்பிற்காக நியாயப்படுத்தாமல், கொரிந்தியரின்மீது இருந்த அன்பினால் நியாயப்படுத்தினார் என்பதை கவனியுங்கள்.

நீ தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, குற்றப்படுத்தப்படும்போது உன் உடனடி பிரதிகிரியை என்னவாக இருக்கிறது?

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

All Things New

2 கொரிந்தியர் நிரூபத்தின் வழியாக இந்த பயணத்தில், எல்லாம் புதிதாயின என்பது தேவன் இந்த உலகத்தில் நம் சாகசமிக்க விசுவாசத்தையும் நம்மை தைரியமாய் இருக்க தேவனுடைய அழைப்பையும் கூறும் இறையியலை ஆராய்கிறது. கெல்லி மிண்டெர் நம்முடைய கிறிஸ்துவ நடக்கை நம்முடைய இயர்கையான சுபாவங்களுக்கு வேற்றுமையானவை என்றும், ஆனால் அது நித்தியமாகவும், எண்ணிலடங்காதமுறையிலும் சிறந்தது என்றும் நாம் புரிந்துகொள்ள உதவுகிறார். இந்த 5-நாள் வாசிப்பு திட்டத்தில், நீங்கள்: எவ்வாறு கடினமான உறவுகளை கையாளுவது, உங்கள் நற்பெயரை எவ்வாறு தேவனிலே நம்புவது, உங்கள் அடையாளத்தை கிறிஸ்துவிலே நங்கூரமிடுவது, வேதனைகளின் காரணத்தையும் அவற்றில் தேவனுடைய ஏற்ப்பாடுகளையும் புரிந்துகொள்வது, மற்றும் எப்படி நாம் இந்த உலகத்திற்கு ஒரு சுவிசேஷ வெளிச்சமாக இருப்பது என்பதைக்குறித்து ஆராய்வீர்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeWay Womenக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு http://www.lifeway.com/allthingsnewஐ பார்வையிடுங்கள்