திட்ட விவரம்

உறுதிமொழிமாதிரி

The Vow

6 ல் 4 நாள்

கூட்டணியின் உறுதிமொழி


திருமணமாகி 17 ஆண்டுகள்,மைக்கேல் மற்றும் ஷெல்லிஒன்றாக வேலை செய்வார்கள், ஒன்றாக விளையாடுவார்கள், ஒன்றாக சாப்பிடுவார்கள், ஒன்றாக நேசிக்கிறார்கள், மற்றும் மூன்று மகள்களை ஒன்றாகவும் வளர்கிறார்கள். அவர்கள் திருமணத்தை "ஒரு மாம்சத்தின்" கூட்டாக பார்க்கிறார்கள். ஆனால் அது எப்போதும் அப்படி இல்லை.


ஷெல்லி:


எங்களது திருமணத்தின் ஆரம்பத்தில், நான் கால்பந்து விளையாட்டு என்றாலே வேறுத்தேன். சனிக்கிழமையை நான் "இனிமையான" நாளாகக் கண்டபோது மைக்கேல் அதை கால்பந்தாட்டத்தில் அனுபவிக்க விரும்பினார். விரக்தியின் பல கால்பந்து வாரங்களுக்கு பிறகு, நான் பிரார்த்தனை செய்ய முடிவு செய்தேன். நான் செய்ய விரும்பும் விஷயங்களை என் கணவர் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன் (சுயநலம் தான், எனக்குத் தெரியும்). இது போன்ற ஒரு சிந்தனையுடன் இருந்த எனக்கு தேவன் உதவினார், "மைக்கேல் விரும்புவதை என்னால் நேசிக்க முடியுமா?" சனிக்கிழமை கால்பந்து "எங்கள்" விஷயமாக மாறியது. அடுத்து என்ன நடந்தது என்று சொல்லவா? மைக்கேல் எனது திட்டங்களுக்கு உதவ விளையாட்டை இடைநிறுத்தத் தொடங்கினார். நான் என் கணவரை ஒரு கூட்டாளியாக நடத்தவில்லை என்பதை உணர தேவன் எனக்கு உதவினார். உண்மையில், கூட்டாண்மை என்றால் என்ன என்று கூட எனக்கு புரியவில்லை. இன்று, எங்கள் திருமணம் முன்னைவிட வலுவாக உள்ளது. நாம் ஒரு மாம்சமாக - எளிதில் உடைக்க முடியாத மூன்று இழைகள். இது ஒவ்வொருவருக்கான ஆர்வத்தை நேசிப்பதன் மூலம் கற்றுக்கொண்ட ஒன்று.


மைக்கேல்:


ஷெல்லியும் நானும் சிறிது காலம் பங்காளிகளாக இருந்தோம், எனவே அவளை சாதாரணமாக எடுத்துக்கொள்வது எளிது. சில வேளைகளில் அவள் என் வேகத்தை மீறும்போது எல்லா வேலைகளையும் நானே செய்வது போல் உணர்கிறேன்.(எனக்கு தெரியும், எனக்கு தெரியும்.) நான் செய்யும் போது, ​​அவள் என்னைப் போலவே உணர்கிறாள் என்று நான் பந்தயம் கட்டினேன். சமீபத்தில், ஷெல்லி ஒரு வாரம் முழுவதும் ஊருக்கு வெளியே சென்றாள், நான் இவ்வளவு நாள் அவளோடு சேர்ந்து செய்த காரியங்கள் அதாவது தலைமுடியை கோதுவது, மதிய உணவை செய்வது, காபி தயாரிப்பது, மற்றும் குழந்தைகளை பேருந்தில் அழைத்துச் செல்வது அவை அனைத்தும் எனக்கு மிக அதிகமாக இருந்தன. திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது, இந்த கூட்டாண்மையில் எங்களுக்கு தனித்துவமான பலம் இருப்பதாக நான் இன்னும் கற்றுக்கொண்டேன். அவளுடைய பலம் என்னுடைய பலவீனங்களையும், என்னுடைய பலம் அவளுடைய பலவீனங்களையும் பூர்த்தி செய்கிறது. நாங்கள் பொருந்துகிறோம். நாங்கள் இருவரும் "ஒரே மாம்சமாக" மாறிக்கொண்டிருக்கிறோம். அவள் என்னை நிறைவு செய்வது அல்ல. தேவன் மட்டுமே அதைச் செய்கிறார். னால், அவருடன் நாங்கள் இரண்டு முழுமையான தனிநபர்கள் எங்கள் உணர்வுகள் மற்றும் துன்பங்களின் தீயில் முற்றிலும் புதியதாக உருவெடுத்துள்ளோம். மேலும், என்னை நம்புங்கள், நாங்கள் ஒன்றாக நன்றாக இருக்கிறோம்.


பிரார்த்தனை:தேவனே, திருமணத்தை உணர்ச்சிகளின் கூட்டாண்மை என்று பார்க்க எனக்கு உதவுங்கள், இரு மாம்சத்தின் இனைப்பு. என் ஆசைகளையோ எனது வாழ்க்கை துணையின் ஆசைகளையோ பார்க்காது உமது சித்தத்தை நோக்க எனக்கு உதவும். திருமணத்திற்கு கூட்டாண்மைக்குத் தயாராக, முழுமையாக வர எனக்கு உதவுங்கள்.


நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

The Vow

இந்த லயிஃப் சபையின் வேதாகம திட்டத்தில், ஆறு தம்பதியினர் சபையில் அதிகாரப்பூர்வமாக சொல்லாத ஆறு திருமண உறுதிமொழிகளைப் பற்றி எழுதுகிறார்கள். ஆயத்தம், முன்னுரிமை, பின்தொடர்தல், ஒற்றுமை, தூய்மை மற்றும் பிரார்த்தனை ஆகிய இந்த உற...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்