திட்ட விவரம்

இயேசுவைப் போலவே மன்னிப்பதுமாதிரி

இயேசுவைப் போலவே மன்னிப்பது

5 ல் 3 நாள்

இயேசுவைப் போலவே மன்னிப்பது-மன்னிப்பு – நாம் சுபாவத்தை மறுவப்படுத்துதல்

உதாரணமாகஒரு பாத்திரத்தை வடிவமைத்தல் அல்லது சுத்தப்படுத்துவது போன்ற செயல்தான் ஒரு மனித வாழ்வில் மன்னிப்பதால் ஏற்படும் மறுரூப செயல். இந்த மன்னிப்பு இதயத்தின் ஆழத்திலிருந்து உருவாகும் ஒரு தெய்வீக பண்பு.

நாம் வாழும் இவ்வுலகமானதுமனித வாழ்வின் எதிர்பாராத விளைவுகளால் ஏற்படும் தவறான நிகழ்வுகளால் நிரம்பி உள்ளது என்பதை நாம் ஒத்துக் கொள்வோம் தானே? நாம் இப்படிப்பட்ட சூழல்களை தவிர்க்க முடியாது என்பதையும் நன்றாய் அறிவோம். ஆனால் எப்பொழுதும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ முடியாது. வாழ்க்கையின் பல தொடக்க நிலையிலும் தொடக்கத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய இந்தப் பாடத்தை தேவன் நமக்குக் கற்பிக்க செயல்படுகிறார்.அதாவது வாகனத்தின் கண்ணாடியில் விழும் மழைத்துளிகளை நீக்கி சுத்தம் செய்யும் ஒரு துடைப்பனை போல (car windshield) உடனுக்குடன் மன்னித்து மறப்பது ஒரு மேலான பண்பு.

யோசேப்பு தனது தந்தைக்கு மிகவும் பிரியமான ஒரு மகன். யாக்கோபுக்கு வேறு பத்து மகன்கள் இருந்தபோதிலும், அவர் தனது முதுமையில் அவருக்குப் பிறந்த யோசேப்பை மிகவும் விரும்பினார் மேலும் யோசேப்பிடம் மிகுந்த அன்பு செலுத்தினார். அவனிடம் யாக்கோபு தனது தனிப்பட்ட உணர்வுகளை மறைக்க ஒருபோதும் கவலைப்படவில்லை- அவரது மற்ற மகன்களை விட யோசேப்பை அதிகம் நேசித்தார். உண்மையில், யோசேப்பிற்காக செய்யப்பட்ட விலையுயர்ந்த பல வர்ண அங்கி மூலம் அவர் தனது விருப்பத்தை வெளியரங்கமாகவும் வெளிப்படையாகவும் வெளிப்படுத்தினார்.

இது மூத்த சகோதரர்களால் கவனிக்கப்படாமல் போகவில்லை, அவர்கள் தங்கள் இளம் உடன்பிறந்தவனான யோசேப்பின் மீது வெறுப்படையத் தொடங்கினர். அவர்களுடைய மனக்கசப்பைப் பற்றி அலட்சியமாகவோ அல்லது உணர்ச்சியற்றவராகவோ இருந்த யோசேப்பு, ஒரு நாள் அவர்களை ஆட்சி செய்வேன் என்று தனது தரிசனங் களைப் பற்றி தனது சகோதரர்களிடம் தெரிவிப்பதன் மூலம் அவர்கள் வெறுப்பை அதிகமாக்கினார். ஒரு தரிசனத்தில், அவனுடைய சகோதரர்களின் தானியக்கட்டுகள் அவனை வணங்கின. மற்றொரு தரிசனத்தில், சூரியன், சந்திரன் மற்றும் பதினொரு நட்சத்திரங்கள் அவரை வணங்கின.

இறுதியில், யோசேப்பின் தெளிவான தரிசனங்களும் —---அவர்களது தந்தையின் விருப்பமும் சகோதரர்களை மிகவும் கோபப்படுத்தியது, அவர்கள் யோசேப்பின் மரணத்திற்கு சதி செய்தனர். அதை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழியைத் தீர்மானிக்க முயன்றபோது, ​​எகிப்துக்கு செல்லும் வழியில் இஸ்மவேலரைக் கண்டார்கள். வர்த்தகரான மீதியானியரிடம் யோசேப்பைக் கொல்வதற்குப் பதிலாக, அவரை அடிமையாக விற்க முடிவு செய்தனர். அவர்கள் யோசேப்பை விற்று விட்டு திரும்பி வந்து யாககோபிடம் அவரது விருப்பமான மகனின் சோகமான விதியைப் பற்றி சொல்ல ஒரு கதையை உருவாக்கினர்.

பதினேழு வயதில், யோசேப்பு எகிப்தில் அடிமையானார், பின்னர் அவர் செய்யாத குற்றத்திற்காக சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டார். அச் சூழ்நிலை யோசேப்பு தனது வாழ்க்கையைப் பற்றியும் அவர் செய்ததைப் பற்றியும் சிந்திக்க அதிகமான நேரத்தை வழங்கியது. அவ்வாறு அவர் சிந்திக்கும் போது, யோசேப்பு மன்னிக்க முடிவு செய்தார். அவர் தனது சகோதரர்களை மன்னித்தார்.

இறுதியில், தேவன் தைரியமான இளைஞனான யோசேப்புக்கு தரிசனங்கள் மூலம் தெரிவித்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார், ஆனால் மன்னிப்பு மூலம் யோசேப்பின் தன்மையை செம்மைப்படுத்துவதற்கு,யோசேப்பு மன்னித்த பின்பே தேவன் கிரியை செய்தார்.

பிரதிபலிப்பு கேள்விகள்:

1. யோசேப்பின் தந்தையின் விருப்பமும், யோசேப்பின் தரிசனங்களும் அவரது சகோதரர்களின் மனக்கசப்பை எவ்வாறு ஏற்படுத்தியது?

2. யோசேப்பு தன் சகோதரர்கள் அடிமையாக விற்ற பிறகு அவர்களை மன்னிக்க தூண்டியது எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

3. மன்னிப்பு செயல்முறையின் மூலம் யோசேப்பின் குணம் எந்த விதங்களில் செம்மைப்படுத்தப்பட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவைப் போலவே மன்னிப்பது

மன்னிப்பு என்பது இயேசுவின் போதனைகளில் ஒரு முக்கிய கருத்தாகும், மன்னிப்பு அவருடைய சாயலைப் பிரதிபலிக்கிறது, மற்றும் கிருபை மற்றும் அன்பின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது.மத் 6:14-ல், இயேசு மன்னிப்பின் முக்கியத்துவத்தை வலிய...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Annie Davidக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ruminatewithannie.in/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்