திட்ட விவரம்

புதையல் வேட்டை 3மாதிரி

புதையல் வேட்டை 3

5 ல் 1 நாள்




அவர்களை புன்னகை செய்ய வை!

பிடி

ஒருவரை சிரிக்க வைப்பது எவ்வளவு எளிது?

இது அந்த நபர் யார் என்பதைப் பொறுத்தது ...

உதாரணத்திற்கு, இரவு உணவின் போது ஒரு எறும்புண்ணியை (anteaterஐ) சிரிக்க வைப்பது எளிதல்ல - அது ஒரு நாளைக்கு 30,000 எறும்புகளை சாப்பிடும்! நீ அதற்காக எல்லா எறும்புகளையும் பிடிக்க முயற்சி செய்வதை எண்ணிப்பார்! பின்னர், ஒரு நீல திமிங்கலத்தை சந்தோஷப்படுத்துவது இதைவிட கடினமான ஒன்று. ஒரு நீல திமிங்கலம் டைனோசரை விட பெரியது, மேலும் அதன் நாக்கு யானையின் எடையை விட அதிகமானது - அது ஒரு நாளைக்கு 40,000,000 கிரில் எனும் சிறிய மீன்களை சாப்பிடும்! எறும்புண்ணியை அல்லது திமிங்கலங்களைச் சிரிக்க வைப்பது கண்டிப்பாக கடினமாக இருக்கும் (ஏய் கொஞ்சம் பொறு - முதலில் அவைகளால் சிரிக்க முடியுமா?). ஒப்பிடுகையில், மனிதர்களை சிரிக்க வைப்பது மிகவும் எளிதானது. ஒவ்வொரு நாளும் உன்னைச் சுற்றியுள்ளவர்களை நீ உண்மையில் சிரிக்க வைக்க முடியும்!

எப்படி? இயேசு நமக்கு ஒரு மிகவும் எளிதான வழியை கொடுத்துள்ளார்:

படி

ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
மத்தேயு 7:12a

பார்

நீ என்ன செய்யவேண்டுமென்று இந்த வசனம் சொல்கிறது?

சரியாக சொன்னாய் - உனக்கு மற்றவர்கள் செய்யவேண்டுமென்று நீ எதிர்பார்க்கும் நன்மையான விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார் - பிறகு அதையே மற்றவர்களுக்கும் செய்.

ஆனால் ஒரு செகண்ட் இரு. நீ எப்போதாவது மற்றவர்களை சிரிக்கவைக்காமல் அழவைக்க வேண்டுமென்று நினைத்திருக்கிறாயா? ஆண்டவர் சொன்னதற்கு நீ கீழ்ப்படிந்து மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும், சற்று நேர்மையாக இருப்போமா? - சிலநேரங்களில் அதை செய்வதற்கு நீ விரும்புவதில்லை. சிலநேரங்களில் அடுத்தவர்களை தடுப்பதையே தேர்ந்தெடுக்க தோன்றுகிறது. சிலநேரங்களில் நீ உன் சுய பவிருப்பத்தில் செயல்படுகிறாய்.

சரி, இப்படி மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டாம் என்று நீ நினைக்கும் தருணங்களில் நீ என்ன செய்யலாம்?

எடு

முதலாவதாக, நீ எப்படி உணர்கிறாய் என்பதை பற்றி நேர்மையாக இருந்து உன் உணர்ச்சிகளை ஆண்டவரிடம் சொல். தயங்காதே, நீ அந்த நபர் வேதனையடைய வேண்டும் என்று விரும்புகிறாய் என்று ஒப்புக்கொள். இருந்தாலும், ஆண்டவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்ற முடிவை எடு - மோசமான ஒன்றைச் செய்வதற்குப் பதிலாக, நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அன்பான ஒன்றைச் செய். அது அவர்களை ஆச்சரியப்படுத்த வேண்டும்!

இப்போது, விஷயங்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்.

ஆண்டவர் அந்த நபரைப் பார்க்கும் கண்களை உனக்கு கொடுக்குமாறு கேள். ஆம், ஜெபி: "ஆண்டவரே, நீர் அந்த நபரை எப்படி பார்க்கிறீரோ அப்படியே நானும் பார்க்க வேண்டும். அவர்களை நீர் நோக்கும் கண்கள் எனக்கு வேண்டும்."

நீ இப்படி ஜெபித்த பிறகு, நீ அந்த நபரை மிகவும் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்குவாய் என்று நான் உனக்கு உறுதியாக சொல்கிறேன். அவர்கள் ஏன் மிகவும் எரிச்சலூட்டுகிறார்கள் என்பதை நீ புரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம்! அவர்களைப் பற்றிய உன் உணர்வுகள் மாறத் தொடங்கும் போது, நீ அவர்களை சிரிக்க வைக்க விரும்புவது மிகவும் எளிதாகிவிடும்.

இப்போது இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் இங்கே இருக்கிறது : அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், நீயும் மகிழ்ச்சியாக இருப்பாய்! அது உன் நாளை மாற்ற ஆரம்பிக்கலாம்...இல்லை, உன் உலகத்தையே மாற்றலாம்.

நீ சூப்பர்!

Dr. Andy

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 3

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் ...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Miracle Every Day Japanக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ja.treasurehuntproject.com/_files/ugd/509686_2bd5af7fede04a2986e93229a59391df.pdf

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்