கனல் எரி: துணிச்சல்மிகு பிரார்த்தனைக்கு ஓர் எளிய வழிகாட்டுதல்மாதிரி

கடவுளிடமிருந்து கேட்பது
கடவுளின் குரலைக் கேட்பது போல் வேறு எதுவும் இல்லை. அவரைக் கேட்க ஒரு வழி அவரது வார்த்தையின் வழியாகும். ரோமர் 10: 17 நமக்குச் சொல்கிறது, விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். (TSB). ஆனால் நாம் பார்வையால் அல்லாமல் விசுவாசத்தால் நடக்க விரும்பினால், கடவுளின் வார்த்தையைக் கேட்க விரும்பினால், கடவுளின் வாக்குறுதிகள் நிறைவேறுவதைக் காண விரும்பினால், நாம் ஜெபித்து கொண்டேயிருக்க வேண்டும், கடவுள் பகிர்ந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று நம்ப வேண்டும். உங்களுக்கு உதவ இங்கே ஒரு சில துருப்புகள் உள்ளன:
1. நீங்கள் காத்திருக்கையில், வைராக்கியத்துடன் இருங்கள்
சாமுவேல் 3 சாமுவேல் கடவுளின் குரலைக் கேட்கக் கற்றுக்கொண்ட கதையை பதிவு செய்கிறது. நமக்கு இதன் அர்த்தம் என்னவாகும் சாமுவேலைப் போலவே, நாம் முதலில் கடவுளின் குரலை அறிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். அதற்கு நேரம், பொறுமை மற்றும் மற்றவர்களின் அறிவுரை தேவைப்படலாம். ஆர்வத்துடன் அவரின் குரலுக்குச் செவிகொடுங்கள்.
2. அதற்கு இடம் ஒதுக்குங்கள்
நற்செய்தி புத்தகங்களில், இயேசு தம் சீடர்களிடமிருந்தும் கூட்டத்திலிருந்தும் விலகி ஜெபிக்க அமைதியான இடத்தைத் தேடுவதைப் பார்க்கிறோம். அவர் இவ்வாறு செய்ததற்குக் காரணம், அவர் கடவுளின் குமாரனாய் இருந்தபோதிலும், அவரும் ஒரு மனிதனாகவே இருந்தார். அவரும் நாம் சந்திக்கும் அதே சவால்களையும் சிரமமங்களையும் எதிர்கொண்டார். அதனால்தான் அவர் எடுத்துக்காட்டியபடி நாமும் ஜெபிக்க ஓர் அமைதியான இடத்தை தேடவேண்டும்.
3. அதில் விடாமுயற்சியுடன் இருங்கள்
நீங்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தாலும் கடவுளின் குரலைக் கேட்பது கடினமாக இருந்தால் தளற வேண்டாம். தொடர்ந்து முன்னேறவும். தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கவும், தொடர்ந்து ஜெபிக்கவும், கடவுள் பேசும்போது அவர் குரல் தான் என அறிந்துகொள்ள அவரது வாக்கியங்களைப் படிக்கவும்! யிரேமியா 33:3ல் கடவுள் வாக்குறுதியளிக்கிறார், “ என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.” (TSB). இந்த வாக்குறுதியை நினைவில்கொண்டு அது நிறைவேறப்படும் என்பதில் உறுதியாக இருங்கள்!
ஜெபம்:
கடவுளே, நீர் நல்லவராகவும் புகழப்படத்தக்கவராகவும் இருப்பதால் நான் உம்மைத் துதிக்கிறேன். தலைமுறைக்கு தலைமுறையாக நீர் மாறுவதில்லை. உமது வாக்குறுதிகளில் நீர் நம்பிக்கைக்குரியவர். உமது அன்பில் நீர் நிலையானவர். உமது வார்த்தைகளில் நீர் நம்பத்தகுந்தவர். கர்த்தாவே பேசுங்கள், உம் ஊழியர் கேட்கிறார். ஆமென்!
இந்த திட்டத்தைப் பற்றி

பரலோக பிதாவுடன் உறவு கொள்வதற்கான அற்புதமான வாய்ப்பாக ஜெபம் அமைகிறது. இந்த 6 நாள் திட்டத்தில், ஜெபம் பற்றி இயேசு நமக்கு என்ன கற்றுத் தந்தார் என்பதை நாம் கண்டறிவோம் மேலும் நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் தொடர்ந்து ஜெபம் செய்ய ஊக்குவிக்கப்படுவோம்.
More