திட்ட விவரம்

அவரே உன் தஞ்சம்!மாதிரி

அவரே உன் தஞ்சம்!

4 ல் 3 நாள்




ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்!

வேதாகமத்தில் இயேசுவுக்கு இம்மானுவேல் என்ற ஒரு பெயரும் உள்ளது, இதற்க்கு "தேவன் நம்மோடிருக்கிறார்" என்று அர்த்தம் (மத்தேயு 1:23) எவ்வளவு அருமையான பெயர்!

இந்த பெயர் அனைத்தையும் கூறுகிறது: ஆண்டவர் நம்முடன் இருக்கிறார், சந்தேகமின்றி!

  • எல்லாம் நன்றாக செல்லும் போது: ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்.
  • விஷயங்கள் சிக்கலாகும்போது : ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்.
  • நீ அன்பும் ஆதரவும் பெறுவதாக உணரும்போது : ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்.
  • நீ தனியாக அல்லது தனிமைப்படுத்தப்பட்டதாக உணரும்போது: ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்.
  • உன் வேதனையில் நீ கைவிடப்பட்டதாக உணரும்போது: உண்மையில் ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்.

எளிதானாலும், அவர் வேறுவிதமாக செய்ய மாட்டார்... அதுவே அவருடைய அடையாளம். அதுவே அவரை வரையறுக்கும் பண்பு. இனி உன்னோடு இருக்கக்கூடாது என்று அவர் நினைத்தாலும் கூட (இதுவும் சாத்தியமற்ற ஒன்று), அவரால் அது முடியாது ஏனென்றால் உன்னுடன் இருப்பதும், உன்னோடு கூட வருவதும் அவருடைய ஆழ்ந்த இயல்பு மற்றும் அவருடைய இயற்கைத் தன்மையாக இருக்கிறது.

இயேசு உன்னுடன் இருக்கிறார், ஒவ்வொரு நாளின், ஒவ்வொரு மணிநேரத்தின், ஒவ்வொரு நிமிடத்தின் ஒவ்வொரு நொடியும்!

இன்னொரு விஷயம், அவருடைய பிரசன்னமே இந்த நேரத்தில் உன்னுடைய பெரிதான ஆயுதமாக இருக்கிறது.

இன்று, நீ முற்றிலுமாக பாதுகாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறாய்... ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்!

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

அவரே உன் தஞ்சம்!

உலகம் உருவான காலத்திலிருந்து தொற்றுப்பரவல், இயற்கை சீற்றங்கள், போர்கள் அல்லது போரின் வதந்திகள் எங்கும் எப்போதும் இருந்து வருகின்றன... ஆனால் உனக்கு, நித்திய தெய்வீக அடைக்கலம் உண்டு. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டவருக்குள் அட...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=dwellingplace

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்