திட்ட விவரம்

ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்மாதிரி

ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்

5 ல் 1 நாள்

கிறிஸ்துவில் உனக்கு அனைத்தும் இருக்கிறது!

ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த கிறிஸ்தவ பாரம்பரியத்திற்கு மேலாகவும் அதற்கு அப்பாலும், ஆண்டவர் தம் ஒரே மகனான இயேசுவின் உயிரை நமக்கு பதிலாக இடம் மாற்ற முன்வந்த மிக அழகான அன்பின் கதையை நாம் பார்க்கிறோம்.

நம்மை இரட்சிப்பதற்காக இயேசு என்னென்ன சகித்தார் என்பதை வேதாகமம் சொல்கிறது: "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்... அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்." (ஏசாயா 53:4-7 பார்க்கவும்)

சில சமயங்களில் ஆண்டவரின் எல்லையற்ற பன்மடங்கு கிருபையை உனக்கு நீயே மறுத்திருக்கலாம்... அப்படியானால், இதை நினைவில் கொள்: இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தி, பாதாளத்திற்கு இறங்கி மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததால், எல்லாம் வல்ல பிதாவை நீ வரம்பின்றி அணுகும் வாய்ப்பை உனக்கு அளித்தார்!

இயேசு உனக்காக, எனக்காக செய்த அனைத்தையும் எண்ணி, சந்தோஷத்தால் நிறைந்திரு!

  • நீ மீண்டும் உன் தலையை உயர்த்த அவர் மிகப்பெரிய அவமானங்களை அனுபவித்தார். (ஏசாயா 53:3-10 பார்க்கவும்)
  • அவர் பாவத்தின் சக்தியை அழித்தார்: நீ அதன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு இனி இரட்சிப்பை பெற இயலும். (யோவான் 8:36 பார்க்கவும்)
  • உன்னை படைத்தவரிடம் நீ ஐக்கியப்படுவதற்காக அவர் தனது பிதாவிடமிருந்து பிரிக்கப்பட்டார். (எபிரேயர் 10:19-22 பார்க்கவும்)
  • உனக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதற்காக அவர் மரணத்தை வென்றார். (ரோமர் 6:23 பார்க்கவும்)

கிறிஸ்துவில் உனக்கு அனைத்தும் இருக்கிறது: சமாதானம், சுதந்திரம், மன்னிப்பு, வெற்றி மற்றும் நித்திய வாழ்வு!

இன்று இயேசுவின் உயிர்த்தெழுதலை கொண்டாட நான் உன்னை அழைக்கிறேன், ஈஸ்டர் அல்லது குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமல்ல, மாறாக எல்லா நாளும்! நீ பரிபூரணமான வாழ்வு வாழ வேண்டுமென்று உன் மீதுள்ள அன்பின் நிமித்தமாய் அவர் தாங்கிய அனைத்திற்காகவும் அவருக்கு நன்றி செலுத்து. (யோவான் 10:10ஐப் பார்க்கவும்)

இந்த அற்புதமான, உயிரூட்டும் தெய்வீக பரிமாற்றத்திற்காக ஆண்டவரை ஸ்தோத்தரிப்போம்… "என் பிதாவே, இந்த விலைமதிப்பற்ற பரிசுக்காக, என்னுடையதைக் காப்பாற்ற உமது மகன் இயேசுவின் உயிரைக் கொடுத்ததற்காக நான் உமக்கு எப்படி நன்றி கூறுவது? இதையொட்டி, நான் என் வாழ்வை உம்மிடம் ஒப்படைத்து உம்மை பின்பற்ற விரும்புகிறேன். நான் என்னுடைய நன்றியின் மிகுதியை உமக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். உம் எல்லையில்லா அன்பிற்காக நன்றி. ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றும் உம்முடையதே. ஆமென்!”

உன் வாழ்க்கையை முழுமையாக வாழு!

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்

இந்த 5 நாள் திட்டத்தின் வழியாக ஈஸ்டரின் உண்மையான அர்த்தத்தை அறிவோம். நாம் வாழ்வதற்காக இயேசு பெரும் துயரங்களையும் மரணத்தையும் கூட சகித்தார். இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றிருக்கும் மரணத்தின் மீதான இந்த வெற்றியை அனுபவிக்க ந...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=easter2023

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்