திட்ட விவரம்

கிறிஸ்து பிறப்பிற்கு தயாராகுவோம்மாதிரி

கிறிஸ்து பிறப்பிற்கு தயாராகுவோம்

7 ல் 4 நாள்




ஒரு கிறிஸ்துமஸ் அதிசயத்தை நீங்கள் பெறுவீர்கள் ✝️

இயேசு இன்னும் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

நான் கிறிஸ்துமஸ் அற்புதங்களை நம்புகிறேன். நான் விசுவாசத்தின் அடிப்படையில் வாழ்ந்த அல்லது அற்புதங்களை சார்ந்து வாழ்ந்த குடும்பத்தில் வளரவில்லை என்றாலும், எங்கள் அனைவருக்கும் ஓரளவு விசுவாசம் இருந்தது.

வருடத்திற்கு இரண்டு முறை திருப்பலிக்கு சென்றோம் மற்றும் நான் ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் படித்தேன். கிறிஸ்தவத்தின் அடித்தளம் எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது, ஆகையால் அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் இயேசு நம்முடன் தனிப்படையாக உறவாட விரும்புகிறார் என்பதை நான் ஒருபோதும் அறியவில்லை. இயேசு சொல்கிறார், “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.” (வெளிப்படுத்தின விசேஷம் 3:20)

இயேசு உங்கள் வாழ்வின் கதவைத் தட்டுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்காக உங்கள் பெற்றோர் அந்த கதவைத் திறக்க முடியாது. உங்கள் நண்பர்கள் திறப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. உங்கள் போதகரோ அல்லது அருட்தந்தையோ கூட உங்களுக்காக கதவைத் திறக்க முடியாது. அது உங்களுக்கென்று தனிப்படையான ஒன்று. அது உங்களுக்கும் இயேசுவுக்கும் இடையிலான ஒன்று. அவர் உயிருடன் இருக்கிறார், அதை உங்களுக்கு நிரூபிக்க விரும்புகிறார். இந்த கிறிஸ்துமஸ் அன்று அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா?

மற்றவர்கள் ஏற்கனவே இந்த முடிவை எடுத்துள்ளனர், ஆனால் நீங்கள் இன்னும் அவரிடம் ஒரு அதிசயத்தைக் கேட்கவில்லை.

கிறிஸ்மஸுக்கு முந்தைய நாள், எனது வாழ்க்கையில் முதல் முறையாக நான் இயேசுவிடம் இரண்டு விஷயங்களைக் கேட்டேன்: வாழ்க்கையில் எனக்கு அன்பைத் தாரும் மற்றும் என் அப்பாவுடனான எனது உறவைக் குணப்படுத்தும், என்று.

நான் முற்றிலும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும் விதமாக, அது அடுத்த நாள் காலையிலேயே தொடங்கியது. அதிகாலையில் எழுந்தேன். வெளியில் இன்னும் இருட்டாக இருந்ததால், ஒரு கிளாஸ் பால் அல்லது ஏதாவது உண்ண சமையல் அறைக்குள் தடுமாறியவாறு நடந்து சென்றேன். சென்றுகொண்டிருக்கும் போது வீட்டின் கூடாரத்தில் ஒரு சிறிய வெளிச்சத்தை நான் கவனித்தேன்​​. என் அப்பா தனியாக அமர்ந்திருந்தார். அவர் என்னைப் பார்த்து, "பவுல், இங்கே வா... நாம் பேச வேண்டும்" என்ற வார்த்தைகளை சொல்லி என் அதிசயத்தைத் தொடங்கினார். இது ஒரு பெரிய அதிசயம் போல் தோன்றாமல் இருக்கலாம், ஏனென்றால் என் அப்பாவை பற்றி நீங்கள் அறியாததால். நான் உடனடியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்து, ஆண்டவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னேன்: "நீர் இருப்பது உண்மை".

வேதாகமம் சொல்லுகிறது, "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்." (எபிரெயர் 11:6)

ஆண்டவர் உங்கள் ஜெபத்திற்கு பதிலளிக்க விரும்புகிறார். அவர் உங்களை நேசிக்கிறார், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் குணப்படுத்த விரும்புகிறார்.

ஏனென்றால் நீங்கள் ஒரு அற்புதம்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்து பிறப்பிற்கு தயாராகுவோம்

இது கிறிஸ்துமஸ் மாதம்! இந்த மாதம் நம் ராஜா இயேசுவின் வருகையைக் கொண்டாடுகிறோம். இந்த வாசிப்புத் திட்டத்தில், அவருடைய வருகைக்காக உங்களை நீங்கள் எப்படி தயார்படுத்திக்கொள்ளலாம் என்பதை பற்றி பேசுவோம்.

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=prepareforchristmas

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்