தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் கண்டடையுங்கள்!மாதிரி

தேவன் ஏன் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
சொல்அகராதியின் கூற்றுப்படி, வாக்குத்தத்தம் என்பது, "ஏதாவது செய்யப்படும் அல்லது செய்யப்படாது என்பதன் அறிவிப்பு" மற்றும் "எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்துதல்"ஆகும்.
மனிதர்களுக்கு உறுதியளிப்பது மிகவும் அவசியம் என்பதை தேவன் அறிந்திருந்தார்: வேறுவிதமாகக் கூறவேண்டுமானால், மனிதர்கள் எல்லாநேரத்திலும் ஆண்டவர்மீது நம்பிக்கைவைக்கலாம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே ஆகும்.
வாக்குத்தத்தம் தேவனுக்குத் தேவையில்லை; மாறாக, மனுஷனுக்குத்தான் தேவை! தேவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை சரியானது, முறையானது,மேலும் அவர் மீதான நம்முடைய எதிர்பார்ப்பு ஒருபோதும் ஏமாற்றமடையாது என்ற உறுதி மனுஷர்களாகிய நமக்குத்தான் தேவை.
நீங்கள் தேவன் மீது நம்பிக்கைவைப்பது மிகவும் உகந்தது; ஏனென்றால்,“பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல”; “அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா?” (எண்ணாகமம் 23:19)
நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும், தேவன் உங்களை மிகவும் நேசிக்கிறார் என்பதை உங்களுக்கு அவர் காட்ட விரும்புகிறபடியால், அவர் தம்முடைய வாக்குத்தத்தம் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்று நான் விசுவாசிக்கிறேன்.
நீங்கள் அவருடைய பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றவர்களாய் இருக்கிறதால், நிச்சயத்துடனும், உறுதியுடனும் உங்களுக்கு வாக்கு கொடுக்க தேவன் ஆயத்தமாக இருக்கிறார்.
இந்த வாரம் இனிதாக அமைய உங்களை வாழ்த்துகிறேன்! இந்த வாரம் முழுவதும், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உங்களுக்கானவைகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் இருப்பதற்கு நன்றி!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தேவன் ஏன் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மனிதர்களுக்கு உறுதியளிப்பது மிகவும் அவசியம் என்பதை தேவன் அறிந்திருந்தார்: அதாவது, மனிதர்கள் எல்லா நேரத்திலும் ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கலாம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே வாக்குத்தத்தங்களை அளிக்கிறார். எனவே, அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிக்கவும், அவற்றை முழுமையாக சுதந்தரித்துக்கொள்ளவும் நாம் என்ன செய்ய வேண்டும்? வாருங்கள் காண்போம்!
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=discovergodspromises
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவர் சர்வவல்லவர்
