BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் மாதிரி

இஸ்ரவேல் தேவனை தவிர்த்து அவர்கள் தங்கள் சொந்த பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். அதன் விளைவாக, அவர்கள் தங்கள் தேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அந்நியரால் ஆளப்படுகிறார்கள். ஆனால் ஏசாயா தீர்க்கதரிசி துக்கமும் வருத்தமும் அவர்களின் கடைசி முடிவாக இருக்காது என்று அவர் அறிந்திருந்தார். இஸ்ரேலின் கிருபைப் பொருந்திய தேவன் அவர்களுக்கான மீட்பரை எழுப்பி, அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவித்து, நித்திய மகிழ்ச்சியை நோக்கி அவர்களை அழைத்துச் செல்லும் நாளை அவர் எதிர்பார்த்திருக்கிறார்.
வாசிக்கவும் :
ஏசாயா 51:11, ஏசாயா 49:13
சிந்திக்கவும்:
உங்கள் வாழ்க்கையின் கனமான பகுதிகள் என்ன என்று இப்போது அடையாளம் காணவும்.
இழப்பு அல்லது துக்கம் பற்றிய உங்கள் சொந்த அனுபவங்களை சிந்தனையில் கொண்டு இன்றைய பகுதிகளை மெதுவாக வாசித்து பார்க்கவும். நீங்கள் மீண்டும் படிக்கும்போது என்ன யோசனைகள் அல்லது உணர்வுகள் தோன்றுகின்றன?
அவருடைய நித்திய மகிழ்ச்சியின் புதுப்பிக்கப்பட்ட பார்வையுடன் தேவன் உங்களை ஆறுதல்படுத்த ஜெபியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்கு BibleProject நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://bibleproject.com
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
