அறியப்பட்டவை: உங்கள் அடையாளத்தைக் கண்டறிய 10 நாட்கள்மாதிரி

ஒரு சிருஷ்டிகருக்கு அவரின் படைப்பு தெரியும். நீங்கள் ஒரு பூவைப் பார்த்து நேரத்தை செலவிடுகிறீர்கள் என்றால், இந்த எளிமையான உதாரணத்தில் கூட, விவரம் மற்றும் அழகுக்கு இவ்வளவு கவனம் செலுத்தப் படுகிறது. வெளியில் சென்று சில பூக்களைப் பார்க்கவும் அல்லது குறைந்த பட்சம் கூகுள் செய்து பார்க்கவும் நான் இப்போது உங்களுக்கு சவால் விடுகிறேன். இது உண்மையிலேயே அதிசயம், இல்லையா?! சிருஷ்டிப்பு கதையின் போது, வயல்களை அலங்கரிக்க பூக்கள் தேவை என்பதை கடவுள் அறிந்திருந்தார் - அது ஒரு பின் சிந்தனை அல்ல. பூக்களில் காணப்படும் சிறிய விவரங்களைப் பார்ப்பதன் மூலம் கடவுள் அக்கறை காட்டுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
வேதத்தின் இந்தப் பகுதியைப் பற்றிய மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், இயேசு உங்களிடம் நேரடியாகப் பேசுகிறார், மேலும் அவர் கவலைப்பட்ட உங்கள் இதயத்தை அமைதிப்படுத்த விரும்புகிறார். கடவுள் தனது படைப்பின் உச்சம் கூட இல்லாத காட்டுப்பூக்களுக்கு இவ்வளவு கவனம் செலுத்தினால் (நினைவூட்டல், நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்றால்: அந்த சிகரம் நீங்கள் தான்), உங்களைப் பற்றிய பெருமையோடு அவருடைய சிறந்ததைச் செய்து, அவர் உங்களை கவனிப்பார் என்று நீங்கள் நினைக்கவில்லையா?. உங்கள் சிருஷ்டிகர் உங்களை ஆழமாக அறிந்திருக்கிறார், அவருடைய இதயம் உங்களுக்காக இருக்கிறது.
ஆனால் உங்கள் பங்கிற்கு, பயம், பதட்டம் மற்றும் சந்தேகம் ஆகியவற்றிற்க்கு இடம் கொடுக்காமல் இருக்க நீங்கள் போராட வேண்டும். கடவுள் தம்முடைய வார்த்தைக்கு உண்மையாக இருப்பார் என்று கொஞ்சம் நம்புவது ஒரு சிறிய பிரச்சனை அல்ல! வேறு யாரேனும் அதைப் படிப்பதில் பெரிய ஆச்சர்யமாக உணர்கிறீர்களா? நான் உணர்ந்தேன் என்று எனக்குத் தெரியும். அற்ப விசுவாசம் என்பது கடவுளுக்கு வெறுப்பு மற்றும் உங்கள் அச்சங்களுக்கு எரிபொருளை சேர்க்கிறது. இயேசு கொடுத்த வாக்குறுதியில் அமர்ந்திருக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய வார்த்தைகளின் உண்மைக்கும், அவருடைய உண்மைத்தன்மையைக் காட்சிப்படுத்திய நேரங்களுக்கும் திரும்பி வாருங்கள். நீங்கள் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவர், ஆழமாக அறியப்பட்டவர், மற்றும் பெருமளவில் பராமரிக்கப்படுகிறீர்கள் என்ற நம்பிக்கையில் நடக்கவும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் அறியப்பட்டவற்றில் தொலைந்து போவதும், நீங்கள் யாரால் அறியப்படுகிறீர்கள் என்பதைத் தவறவிடுவதும் எளிதாக இருக்கும். கடவுளுடைய வார்த்தை உங்களைப் பற்றி, நீங்கள் யார், அவர் உங்களை யாராக ஆக்கினார் என்பதைப் பற்றி நிறைய கூறுகிறது. இந்த 10 நாள் தியானம் உங்கள் உண்மையான அடையாளத்தைக் கண்டறியும் பயணத்தில் உங்களை அழைத்துச் செல்ல உதவும்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவர் சர்வவல்லவர்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்
