திட்ட விவரம்

தேவ இராஜ்ஜியத்தின் வழிகள்மாதிரி

The Way of the Kingdom

5 ல் 2 நாள்

கேட்பதற்கு காது



இஸ்ரவேலிலே வரலாற்றையும், வசனங்கள் பாரம்பரியங்களையும் தலைமுறை தலைமுறைக்கும் வாய்மொழியால் எடுத்துச் சொன்னார்கள். தேவன் பல்வேறு விதங்களில் பல்வேறு காலகட்டத்தில் தீர்க்கதரிசிகள் மூலமாக பேசினார். தேவனுடைய சத்தத்தை கேட்டு அதன்படி வாழுகிற மக்களை தேவன் விரும்புகிறார். இயேசுவின் காலத்தில் கேட்பதற்கு காது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாய் இருந்தது.



அவர் பேசும் சமயங்கள், நாம் கவனிக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டிய சமயங்கள். வேதம் சொல்லுகிறது கேட்பது என்பது உண்மை மற்றும் விசுவாசத்திற்கு தொடர்புடையது என்று. "கேட்பதற்கு காது" என்னும் வாக்கியம் வெளிப்படுத்தப் போவதை கேட்பவர் திறந்த மனதுடன் கேட்க வேண்டும் என்பதை எடுத்துக் காண்பிக்கும் ஒரு பழமொழி. வேறுவிதமாக சொன்னால், “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்றால் "விழித்து கவனமாகக் கேள்" என்று பொருள்! ஆவிக்குரிய கண்ணோட்டமே ஆவிக்குரிய வெளிப்பாடை புரிந்து கொள்ளமுடியும். 



தேவன் என்ன செய்கிறார் என்று உணராததினால் எத்தனை பேர் தேவனுடைய அசைவாடுதலை தவற விட்டிருக்கிறார்கள்? தங்கள் மனதையும் மனப்பான்மையும் திறப்பதற்கு பதிலாக தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொண்டார்கள். அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாமல் விட தங்கள் நிலையை அவமதித்து, விமர்சித்து, தங்கள் சூழலின் மேல் பழியைப் போட்டு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொண்டனர். நாம் புத்திசாலிகளாக, கேட்பதற்கு காதுள்ள ஒளியின் பிள்ளைகளாக இருக்க வேண்டிய நேரம் இது. நாம் பாரம்பரியம் மற்றும் அரசியலுக்கு சேவை செய்து கொண்டே தேவராஜ்யத்தில் நம் இடத்தைப் பிடிக்க முடியாது. ஏற்றங்கள், திடீர் மாற்றங்கள், ஏன் நெருக்கடிகள் கூட நாம் எதிர்பாராத வழிகளில் தேவ ராஜ்ஜியத்தின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் நிதி நிர்வாகம், வணிகம், அரசியல், குடும்பம், கல்வி மற்றும்  ஊழியத்திற்கு தேவையான ஆவிக்குரிய ஆக்கபூர்வமான உத்திகளையும் உருவாக்கும். அப்படி நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்த நாம் சில எதிரான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.



நெருக்கடி என்றாலும் அதின் மத்தியிலும் தங்கள் முன் இருக்கும் வாய்ப்புகளை கிறிஸ்துவின் சரீரமாகிய சபை விழிப்புடன் பற்றிக் கொள்ள வேண்டும். புரிதலுடன் பார்க்கவும் கேட்கவும் வேண்டும், நமது வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துன்பங்கள் ராஜ்யத்தை முன்னேற்றுவதற்கான ஆக்கபூர்வமான உத்திகளைத் தூண்டும்போது அதை நாம் கவனமாய் பற்றிக் கொள்ள வேண்டும். நமது தலைமுறையினர் தேவராஜ்ஜியத்துடன் ஒத்துப் போகத்தக்கதகாக நமது எதிர்பார்ப்புகள் மற்றும் எண்ணப்போக்குகளில் செல்வாக்கு செலுத்த ஆவியானவரை அனுமதிப்போம்.





நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

The Way of the Kingdom

தேவன் தமது திருச்சபையை எழுப்புகிறார், எழுப்பதலை ஊற்றுகிறார். நாம் விரிந்த மனப்பான்மையோடு அதனை நோக்க வேண்டும். இது போன்ற கடினமான நேரங்களில், தப்பித்து விட ஆசைப்படுவோம். இருப்பினும், இது விலகி ஓடுவதற்கான நேரம் அல்ல. நாம் இ...

More

இந்தத் திட்டத்தை வழங்கியமைக்கு பேக்கர் பதிப்பகத்தாருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு: http://bakerpublishinggroup.com/books/the-way-of-the-kingdom/395661/ஐ பார்வையிடுங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்