திட்ட விவரம்

முக்கியங்களுக்கு முக்கியத்துவம்மாதிரி

முக்கியங்களுக்கு முக்கியத்துவம்

3 ல் 1 நாள்

எச்சரிப்புக்காக எழுதப்பட்டவை எச்சரிப்புக்காக எழுதப்பட்டவை 1.கொரிந்தியர். 10:11 கற்றது ஒன்று செய்வதோ வெறொன்று …. மோசே காலத்து வேதத்தின் மூத்த குடிமக்கள் முந்தைய காலத்து மூத்தவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது உண்டு. அவர்களது நல்ல காரியங்களை அடையாளம் காண்கிற நாம் அவர்களிடத்துக் காணப்பட்ட குறைவில் அவர் அடைந்த விளைவையும் உற்று கவனித்தல் அவசியம் .அவர்கள்அற்புத அடையாளங்கள் வழி நடந்து சென்றவர்கள். ஒரே வழி நடத்துதலையும் ஆலோசனையையும் பெற்றவர்கள் அவர்கள். ஞானக்கன்மலையாம் கடவுளின் அதிசயத்தைக் கண்டு வியந்தவர்கள். ஆனால் பெற்ற நன்மைகளை மறந்து கடவுளுக்குப் பிரியமாய் நடக்காது போனார்கள்.இவர்களில் சிலர் ஒரே கூட்டமாய் இருந்தாலும் வேறு வேறு வழியை பின்பற்றினர். சீர் கெட்டுப்போனதால் வழியிலே மரித்துப்போனார்கள். நாமும் இக்காலங்களில் நெறி தவறி வழிமாறி கடவுளது நோக்கத்தை விட்டு அலைந்து திரிந்து போனால் தண்டனைக்கு தப்ப வழியில்லை. வாய்ப்புகள். சுதந்திர வாக்குத்தத்தங்கள் பெற்ற நாம் கீழ்ப்படியாமல் இருப்போமென்றால் கோபாக்கினைக்குத் தப்பமுடியாது. மூதாதையர் தந்த விசுவாச மார்க்கத்தில் அவர்கள் பெற்றுத் தந்த அற்புத அடையாள வாழ்வின் எல்லைகளில் எத்தனைபேர் உண்மையுள்ளவர்களாய் வாழ்கிறோம். ஒரே நிழலில் வாழ்கின்ற நம்முள் எத்தனை விதமான பிறழ்ச்சிகள், வீழ்ச்சிகள் இப்படிப்பட்டமுரணான காரியங்களுக்கு விலகி வாழ்ந்து, எச்சரிப்புப் பெற்று வரலாறை முன் வைத்து நல் வழி வகுத்துச் செல்ல இக்காலம் ஒரு வாய்ப்பு ! பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் தனிப்பட்ட மனிதரின் தீர்ப்பு ! ஒரே மந்தை ஆடுகள் வேறு வேறு திசையில் ! திரும்பி பிழைப்போம் ! கடவுளை பரீட்சை பாராயாக 1. கொரிந்தியர் 10:9 அது போல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக முன் நிறுத்தப்பட்டிருக்கும் மாதிரிகள் நிரம்ப உண்டு. அவை நம்மை எச்சரிக்கின்றன. தீமையின் மேல் ஆசை கொள்ளாதே. விட்டு வந்த விக்கிரக வழி பின் சென்றால் விலகிப்போகிறாயென பொருள். பொருள் ஆதாய சந்தையை பின்பற்றுகிறவர்கள் பின் வாங்கிப்போனவர். இழிவான இச்சைகளை முன்னிறுத்துகிறவர்களே இடறிப்போனவர்களாவர். நினைவு கொள்ளூங்கள். கடவுளது பொறுமைக்கோர் எல்லை உண்டு. ஒரே நாளில் ஆயிரங்கள் மடிந்து போயினரே!இது சரித்திரம் சொல்லும் பாடம். கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் தர்க்கம் செய்கிறவர்கள். காலத்தோடு விளையாடி தங்கள் கிரியைக்கு எற்ப தண்டனை பெறுபவர்கள். இப்படிப்பட்ட கிரியைகளுக்கும், கிரியை செய்கிறவர்களுக்கும் விலகியிருங்கள். இல்லையென்றால் மரண தூதனை சந்திப்பீர்கள் . பழைய சம்பவங்கள் நம்மை எச்சரிக்க எழுதப்பட்டவை. நிற்கிறேன் என்று சொல்கிறவன் விழுந்து போகாதப் படிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் நல் உபதேசத்துக்கு வைக்கப்பட்டவைகளை நல் உபதேசத்துக்கே உபயோகியுங்கள் கலப்பு உபயோகம் வேண்டாம் கலப்பற்ற சிந்தையே பரிசுத்தம். உங்களைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். இங்கொன்று அங்கொன்று பேசி சீரழிந்து போகாதீர். சுத்தமாக வாழப்பழகுங்கள். தேவன் நம்மை பரிகசிக்கவொட்டார்.நல் மனசாட்சியுடன் வாழுங்கள். சோதனையில் விழாதிருங்கள். கடவுளை பரீட்சைப் பார்த்து நீங்கள் உங்களுக்கு கேடுண்டாக்காதீர்கள்.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

முக்கியங்களுக்கு முக்கியத்துவம்

சபையானது எச்சரிப்பும் கவனமும் பெற்று முடிவுகால சிந்தையோடு முக்கியமான காரியங்களுக்கு முக்கியம் கொடுத்து திருச்சபையிலும், திருப்பந்தியுலும், திருப்பணியிலும், பரிசுத்தத்தின், அன்பின் அச்சடையாளங்களாகவும் மரு உருவாக்கம் பெற்ற...

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக செ. ஜெபராஜ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய jebaraj1.blogspot.com க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்