திட்ட விவரம்

கிறிஸ்துவுக்குள் கண்டு கொண்ட வாழ்வுமாதிரி

கிறிஸ்துவுக்குள் கண்டு கொண்ட வாழ்வு

3 ல் 1 நாள்

கடவுளுடைய நண்பரானோம் கடவுளுடைய நண்பரானோம் இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது’ அவர் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடேஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். 2 கொரிந்தியர் 5 : 18 உன் நன்பனைச் சொல் உன்னைச் சொல்கிறேன் என்பது முது மொழி. உண்மை நண்பர் என்பது நடத்தை, அன்பு, தியாகம், வழியில் வேர் விடும். நட்பின் அடிப்படையில் உறவு கொள்ளும் ஒரு நபர் நேசிக்கிறவர்களையே நேசிப்பதில்லை. எதிராளியாகிய எதிர் வினையில் உள்ளவரையும் ஏற்று அவர்களில் மாற்றம் விளைவித்து அவர்களையும் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் வலிமையான கடவுளின் அன்பு. இவ்வன்பை இவ்வுலகம் கண்டதில்லை. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை கிறிஸ்து இயேசுவின் மூலம் கண்டு கொண்டோம். கடவுள் நண்பரானார். பயத்தின் அடிப்படையில் விளைந்த பக்தியானது இப்போதோ அன்பின் அடிப்படையில் வளரும் உறவானது. அவர் நம்மீது அன்பு கூர்ந்தாரென்றால் நாம் அவருக்கு எதிர் வினை.யாக செய்த பாவ செயல்களுக்கு தக்க செய்யாமல் உடனுக்குடன் மன்னித்துஅன்பை ஈகையாக்கினார். உறவு மலர்ந்தது. நட்பு பிறந்தது. நண்பரானோம். இனி நாமும் ஒருவருக்காக ஒருவர் வாழ்ந்து அனைவரும் கடவுளுக்காக வாழுவோமென உறுதி கொள்வோம். இதுவே அன்பின் வழி அன்பின் செய்தி. இச்செய்தியே முன்னே தூரமாயிருந்த நம்மை கடவுளிடம் நெருங்கி சேர வைக்கிறது. இது கடவுளுடைய கிருபை என்கிறோம். இப்படிப்பட்ட அன்பினால் கவரப்பட்டு அவருக்கே வேலையாட்களாக தொண்டு ஊழியம் செய்கிறோம். உலகம் நம்மை பகைத்தாலும் பரிகசித்தாலும் இந்த நண்பரை விட்டு விலகமாட்டோம். இச்செய்தியினாலே அநேகரை மீட்புக்குள்ளாக்கப் பிரயாசப்படுகிறோம். அனுதினம் நாம் துக்கப்படுத்தப்பட்டாலும் மனமடிவாக்கப்பட்டாலும் நம் செய்தி மூலம் அநேகர் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். செழுமை பெறுகிறார்கள். நாம் ஒன்றுமில்லாதவர்களாயிருந்தாலும் அநேகரை எல்லாமுடையவர்களாக மாற்றியிருக்கிறோம். மனம் திறந்து மனமாறா அன்பு கூர்ந்து பலரை கிறிஸ்துவுக்கு நண்பர்களாக்குகிறோம் கடவுளுடைய ஆலயமானோம். நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. 2 கொரிந்தியர் 6:!6 வாழ்கிற ஆண்டவர் வாழும் மனிதருக்குள் வாழ விரும்புகிறார். ஏதோ இருக்கிறோம் என்றல்ல, உயிருள்ள வாழ்வோடு வாழ்கிறோம். ஊனுடலில் உயிருள்ள அசைவை பெற்றுத்தந்தவரே கடவுள். தண்ணீரோடு அடித்துக்கொண்டு செல்லப்படும் செத்தமீன்களல்ல நாம். எதிர் நீச்சலில் செல்லும் உயிரோட்டம் கொண்டவர்கள். உயிருள்ளவருக்கு உகந்தவராய் உயிருள்ள நமக்குள் வாழ்ந்திருக்கும் ஆண்டவர் நீங்களே ஆலயமென நம்மை உறவாக்கிக் கொள்ள விரும்புகிறார். நான்கு சுவருக்குள் அடைப்பட்டு இருப்பவர் அவர் அல்ல. நம்மோடு கலந்து நம்மை ஆலயமாக்கி சுத்தத்தோடு காத்துக்கொள்ள விரும்புகிறார். இதயத்தில் சுத்தமுள்ளவரே கடவுளை தரிசிப்பார்கள். கடவுள் எங்கோ இருந்து இவ்வுலகை ஆட்டிப்படைக்கிறார் என்றல்ல எனக்குள் இருந்து என்னை ஆளூகை செய்கிறார் என்பதே ,அவரின் ஆலயமாக நாம் திகழ்வதின் அர்த்தம். அதுவே அற்புதம். என் ஜனம் என்று கூறி என் ஜனத்தோடு வாழ்வேன் என கூறி குடும்ப உறவை தருகிறவர் அவர். அந்நியர் அல்ல. நாம் அறியாதவரும் அல்ல. நான் அவர்கள் தேவனாயிருப்பேனென உறுதி கூறி உறவு கொள்ளுகிறார். அவர்கள் என் ஜனமாயிருப்பார்களென உறவுக்கு இரு பக்க வலுவூட்டுகிறவரும் அவரே. ஆகவே அசுத்த உறவுகளிலிருந்து பிரிந்து பரிசுத்தத்தை ஏற்று அவரது இந்த அழைப்புக்கு சம்மதம் சொல்ல வேண்டியது நமது பொறுப்பு. தகப்பன் மகன் உறவு கடவுள் அவர்தம் மக்கள் உறவு. இதை ஆண்டவரே கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட வாக்குத்தத்தம்பெற்ற நாம் நம்மை சுத்திகரிப்புக்கு ஒப்புக்கொடுத்து அசுத்தத்தை தொடாமல் நம்மை அவரது ஆலயமாகப் பேணிக்காத்துக்கொள்ள வேண்டும். பரிசுத்தமாக்கப்பட்ட பிள்ளைகளே உலகத்திலும் உலகத்துக்குரியவைகளிலும் அன்பு கூறாதிருங்கள். அழியாத ராஜ்யத்துக்குரியவர்களே, வெளிப்படுத்தப்பட்டவர்களே, வெளிச்சத்துக்குரியவர்களே ,இருளின் காரியங்களுக்கு உட்படாதிருங்கள். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் சம்பந்தமேது? தவறான தாக்கங்களுக்கு விலகி வாழுங்கள். கலப்பு எண்ணங்களுக்கு விலகி வாழுங்கள். சுத்திகரிப்பு பெற்று கலப்பில்லாத ஒரே ஞானப்பாலின் பிள்ளைகளாக வாழுங்கள்.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துவுக்குள் கண்டு கொண்ட வாழ்வு

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவுடன் வாழும் வாழ்வு காணமுடியாத கடவுளை கிறிஸ்து இயேசுவுக்குள் கண்டோம். நண்பராகக் கண்டோம். நம்மை ஆலயமாக்கிக் கொண்டார். பரிசுத்தம் தந்தார். அவர் தம்மையே மனுக்குலத்துக்கு தந்ததினால் ...

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக செ. ஜெபராஜ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய jebaraj1.blogspot.com க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்