திட்ட விவரம்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

17 ல் 1 நாள்

இயேசு எல்லாம் தெரிந்தவர்.  தான் சர்வ வல்லவர் என்றும் பிதாவுடன் நீங்காத உறவிலிருப்பவர் என்றும் அறிந்திருந்தும் அவர் தம்முடையவர்களிடம் அன்பு கூர்ந்தார். அன்பின் வெளிப்பாடாக அவர் ஒரு வேலைக்காரனைப்போல அவர்களின் கால்களைக் கழுவினார். பணியே அன்பின் வெளிப்பாடு என்று அவர் போதித்தார். 


தங்கை, தம்பி! நீ கடவுளுடைய பிள்ளையானால் உன்னைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? இயேசு போதித்த அன்பின் மகத்துவத்தைக் கற்றுக்கொண்டாயா? நீ நேசிக்கும்படி உனக்குக் கடவுள் கொடுத்த மக்களுக்கு அன்பினாலே ஊழியம் செய்வாயா?


ஜெபம்:


இறை மைந்தனான இயேசுவே, நீர் சர்வ வல்லவர், இறைவனுடன் இசைந்திருப்பவர். ஆயினும் நீர் அன்பிலே பணியாற்றினீர். உமது மாண்புமிகும் தெய்வீக அன்பு ஏழ்மையான பணியாள் உருவிலே வெளிப்பட்டதே! என்னுடைய உள்ளத்திலும் சிந்தையிலும் உம் தூய ஆவியை ஊற்றும். ஐயா, நீர் என்னை நேசித்ததுபோல நான் மற்றவர்களை நேசிக்குமளவுக்கு என்னை நொறுக்கி உருவாக்கும் சுவாமி.  


இயேசுவின் பதில்…


என் குழந்தாய், என் பிதா அன்பாகவே இருக்கிறார். ஆகவே நான் உன்னில் அன்பு கூர்ந்தேன். நான் நேசிப்பதுபோல நீயும் நேசிக்க வேண்டும் என்பதற்குத்தான் இந்தப் பணியாள் பாடம். வா குழந்தாய், என்னோடு கை கோர்த்து அன்பு செலுத்து; இசைந்து பணியாற்று. நான் உன்னோடுதான் என்றும் இருக்கிறேன். 



வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.

இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்