நீங்கள் பிரியத்திற்குரியவர்கள்மாதிரி

எளிமையான அன்பு
சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. (எபிரெயர் 13:1)
எனது இரு பிள்ளைகளும் தொடக்கப்பள்ளியில் படிக்கிறார்கள், அவர்கள் வகுப்பில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் வகையில் நான் அவர்களது வீட்டுப்பாட அட்டையில் தொடர்ந்து கையெழுத்திட்டுக் கொண்டேயிருக்கிறேன் மேலும் என் பிள்ளைகள் செய்த செய்யாத பணிகளைப் பற்றி காலாண்டு அறிக்கையும் என் கைக்கு வருகிறது. என் பிள்ளைகளுடைய தரத்தை சொல்ல அவர்களுடைய அறிக்கை அட்டைகள் தொடர்ந்து என் கைக்கு வருகிறது. நாம் திருப்திடைய அவர்களது தரத்தை கூட்ட கூடுதல் மதிப்பெண்கள் கூடுதல் பாடத்திட்டத்தில் இருந்து கிடைக்கிறது.
சில நேரங்களில் இயேசுவை பின்பற்றுவதை ஏதோ நம் தரத்தை சம்பாதிப்பதற்காக செய்கிற காரியம் போல நினைக்கிறோம். முதல் தரமான தரத்தை அடையும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்று அதிசயிக்கிறோம். நான் உள்ளூரில் ஓரிடத்தில் காய்கறிகளை தானம் செய்துவிட்டால், சமயலறையிலும் உதவி செய்ய வேண்டுமா? என்னுடைய எதிரியும் நான் நேசிக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறேன் ஆனால் என்னைப் பற்றி மிகவும் மோசமாக புறணி சொல்லிய ஒருவரைப் பற்றி என்ன செய்வது? நாமும் பேதுருவைப் போல இயேசு கிறிஸ்துவிடம் கேள்வி இப்படியாக கேள்வி கேட்ட பேதுருவைப் போல இருக்கிறோம், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? (மத்தேயு 18:21 ).
எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர் இதை எளிமையாக வைத்துக் கொள்ள நமக்கு அறிவுறுத்துகிறார். எத்தனை முறை என்று எண்ணுவதை விட்டுவிடுங்கள்—அன்பு கூறுங்கள் அவ்வளவே! நமது தரத்தை அறிந்து கொள்வது நமக்கு அவசியமே ஏனெனில் அப்போதுதான் நாம் எங்கே நிற்கிறோம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தேவனுக்கு, இது தரத்தைப் பற்றினது அல்ல,இது நமது மனதைப் பற்றியது. நாம் சுதந்திரமாக நேசிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், ஏனெனில் நாம் தேவனால் அப்படியே நேசிக்கப்பட்டிருக்கிறோம். (1 யோவான் 4:19). நான் போதுமானளவு செய்திருக்கிறேனா என்று கேட்பதைவிட, தேவன் எங்கெல்லாம் மற்றோரை நேசிப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு கொடுக்கிறாரோ: சிறையில் இருப்போரை நினைவு கூறுங்கள், நாடி வந்தோரை நன்றாக கவனியுங்கள்,விருந்தோம்பல் செய்யுங்கள், இருப்பதைக் கொண்டு நிறைவாய் உணருங்கள்—ஆனால் இவை அணைத்தும் எளிமையான ஒரு கட்டளையில் இருந்து வந்தவை: அன்பு.
நீங்கள் ஜெபிக்கும்போது, தேவனின் எளிமையான அன்பிற்காக நன்றி சொல்லுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் யாராயிருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்களை எங்கேயிருந்தாலும், கர்த்தர் உங்களை நேசிக்கிறார்! இந்த மாதம், அன்பைக் கொண்டாடும் தருணத்தில், எந்த அன்பைக் காட்டிலும் தேவ அன்பே சிறந்தது என்பதை மறந்து விடாதிருங்கள். இந்த நான்கு நாள் திட்டத்தில், தேவ அன்பில் உங்களை அமிழ்த்திக் கொள்ளுங்கள்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருடைய கணக்கு

மேடைகள் vs தூண்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்
