திட்ட விவரம்

தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்மாதிரி

தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்

5 ல் 4 நாள்

லூக்காவின் நற்செய்தி


நம்மை மீட்க தேவன் நம்முடன் இருக்கிறார்


மாக்ஸ் லுக்கேடோ இவ்வாறாகச் சொல்கிறார் “வேதாகமத்தின் நோக்கமானது தனது பிள்ளைகளைமீட்பதற்காகத் தேவன் வைத்திருக்கும் திட்டத்தைச் சொல்வது தான். மனிதன் தொலைந்து போயிருப்பதையும்மீட்கப்பட வேண்டும் என்பதையும் அது உறுதிப்படுத்துகிறது. தனது மக்களை மீட்பதற்காக அனுப்பப்பட்டமனித உடலில் இருக்கும் தேவன் தான் இயேசு என்ற செய்தியைச் சொல்வது தான் வேதகமம் ஆகும்.”


இயேசு இந்த உலகத்துக்கு வருவது என்பதைப் பற்றிய அனைத்துமே நம்மை மீட்பதற்கான அவரதுவிருப்பத்தைச் சுற்றியே இருக்கின்றது.  லூக்காவின் புத்தகத்தில் வாக்களிக்கப்பட்ட மேசியாவை சந்தித்த பலநபர்களைப் பற்றி லூக்கா எழுதியிருக்கிறார். இயேசுவின் தாயாராகிய மரியாள் இயேசுவைப் பிறக்கச் செய்துஅவரை வளர்க்கும் ஆணையை ஏற்றுக் கொள்கிறார். தேவனைப் பாடலால் அவர் துதிக்கிறார். யூத மக்களுக்குஅவர் கொடுக்கவிருக்கும் மீட்புக்காக அவர் நன்றியுள்ளவராக இருந்தார். யோவான் ஸ்நானகனின் தகப்பனாகியசகரியா, தன் மக்களுக்கு மீட்பைக் கொண்டு வந்து, அவர்களுக்குத் தன் இரக்கத்தைக் காட்டுவதற்காகவரப்போகும் மேசியாவைப் பற்றிய தனது பாடலில் அவரை உயர்த்திப் பாடுகிறார்.  தேவாலயத்தில் இயேசுபாலனைப் பார்த்த சிமியோன், யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும் கிடைக்கப் போகும் மீட்பைப் பற்றி தனதுநன்றியைப் பாடலின் வழியாகத் தெரிவிக்கிறார்.


“மீட்பு” என்ற சொல்லைச் சுற்றி ஏன் இத்தனை அதிகமான முக்கியத்துவமும் செயல்களும் நடக்கின்றன என்றுநீங்கள் ஆச்சரியப்படலாம். உங்களுக்கு மீட்பு தேவையா என்று கூட நினைக்கலாம். அது அத்தனைமுக்கியமானதா?  நாம் அனைவருமே பாவம் செய்து தேவனது மகிமையை இழந்தவர்களாக இருக்கிறோம் என்றுவேதம் நமக்குத் தெளிவாகச் சொல்கிறது. நாம் விபச்சாரம் செய்திருந்தாலும், பிறரிடம் பொய்சொல்லியிருந்தாலும், பரீட்சையில் ஏமாற்றியிருந்தாலும், போக்குவரத்து விதிகளை மீறியிருந்தாலும் நாம்அனைவருமே பாவிகள் தான். தேவனது பார்வையில் பாவம் என்பது பாவம் தான். நாம் எத்தனை தான்சிறப்பானவர்களாக இருந்தாலும் நம்மில் ஒரு பகுதியானது உடைந்ததாக, சரி செய்யப்பட வேண்டியதாகத் தான்இருக்கின்றது.  கிறிஸ்துவில் தேவனது மீட்கும் வல்லமையானது நமக்குத் தேவையான எல்லா சரி செய்யும்வேலைகளையும் செய்துவிடுகின்றது. எத்தனை சுய நம்பிக்கை இருந்தாலும், நமக்கு நாமே உதவி செய்துகொள்ளும் ஆற்றல் இருந்தாலும், நேர்மறை சிந்தனைகள் இருந்தாலும் இந்த வேலையை அவை செய்யவேமுடியாது. அவை சிறிது உதவலாம், ஆனால் முழுவதுமாக அல்ல. கிறிஸ்து நமக்காகத் தனது மரணத்தில் சிந்தியஇரத்தம் நம்மை நாம் செய்த, செய்யப் போகின்ற ஒவ்வொரு பாவத்திலும் இருந்து சுத்தப்படுத்துகிறது. இது நம்சிந்தனைக்கே எட்டாத ஒரு உண்மையாக இருக்கிறது அல்லவா? நம் வாயினால் இயேசுவே ஆண்டவர் என்றுஅறிக்கையிட்ட அதே நொடியில் நாம் மீட்கப்பட்டுவிட்டோம். எல்லா நோக்கங்களுக்கும் இது பொருந்தும்.  நாம்உடனடியாக ஒரு பரிசுத்தவானாக உடனேயே உருவம் மாற்றப்பட்டுவிட மாட்டோம்.  மாறாக நாம் நமது பாவசுபாவத்தைப் பற்றியும் தேவனது பரிசுத்தத்தைப் பற்றியும் உணர்வைப் பெறுவோம். சிலுவையைப்பற்றியும் இந்தஇரு உண்மைகளையும் இணைக்கின்ற அதன் பணியையும் பற்றி நாம் அதிகம் அதிகமாக உணர்வடைவோம். இப்போது இயேசு நம்மை நீதிமானகள் என்று அறிவித்துவிட்டார். நம் பாவங்களுக்காக அவர் ஏற்றுக் கொண்டமரணமே இதற்கான காரணமாகும். ஆகவே இது எவ்வாறு நம்மைப் பாதிக்கிறது?  துவக்கத்தில் நாம் பாவத்தின்நித்திய விளைவுகளில் இருந்து அவர் நம்மைப் பாதுகாத்ததற்காக நாம் நன்றியுள்ளவர்களாக வாழ்வோம். பின்னர்மனந்திரும்புதலை நம் வாழ்க்கை முறையாக மாற்ற மிகவும் அதிகமாக முயற்சி செய்வோம்.  அதாவது தயக்கம்இல்லாமல் ஒழுங்காக நமது தோல்விகளை சர்வ வல்லமையான தேவனிடம் தினமும் ஒத்துக் கொண்டு அவரதுஅன்பு நம்மை மன்னிக்கிறது என்பதை அறிந்து கொள்கிறோம். மனந்திரும்புதல் இல்லாமல் மன்னிப்பு இல்லைஎன்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும். நம்மை மீட்பதற்கு நாம் எதையும்செய்யவில்லை என்ற உண்மையை உணர்ந்தவர்களாக வாழ வேண்டும். தேவனது நன்மையும் கிருபையும் தான்இதை நமக்குச் செய்கிறது என்று அறிந்திருப்போம். இறுதியாக, மீட்கப்படுதல் என்பது எப்போதுமே நம்மைப்பற்றியது மட்டுமே அல்ல. அது பிறரை இயேசுவை நோக்கி சுட்டிக் காட்டுவதும் ஆகும். நம்மை அவரால் மீட்கமுடியும் என்றால் அவர்களையும் அவரால் மீட்க முடியும். அவர்களுக்கு இது இன்னும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நமது வாழ்க்கையும் நமது மறுபிறப்பும் இது நடக்க ஒரு உந்து சக்தியாக இருக்க முடியும்.


இந்த புதிய வாழ்வில் நீங்கள் நடந்து செல்லும் போது ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக, உலகத்தின் மீட்பர்உங்களை உங்களிடம் இருந்து மீட்டிருக்கிறார் என்றும் அவருக்காக மீட்டிருக்கிறார் என்றும் அறிவீர்கள். உங்கள்மதிப்பு அவர் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு இருக்கிறது என்றும் புரிந்து கொள்வீர்கள்.  இதை உங்களிடமும்பிறரிடமும் சொல்லுங்கள்.


ஜெபம்:


அன்பின் ஆண்டவரே,


உம் மகனாகிய இயேசுவின் மூலமாக என்னை மீட்டதற்காக உமக்கு நன்றி சொல்கிறேன். என் சிந்தனை, வார்த்தை, செயல் மூலமாக செய்த என் பாவங்களை எனக்கு மன்னிக்கும்படியாகக் கேட்கிறேன். என் வாழ்வில்நீர் அதிகமாக வேண்டும். எனக்கான உமது இனிமையான இரக்கத்தையும் உமது தாரளமான கிருபையைப்பற்றியும் எனக்கு நினைவுபடுத்தும். 


எனக்கு நீர் நன்மை செய்ததை என் வாழ்க்கை சாட்சியாகச் சொல்வதாக.


இயேசுவின் பெயரால், 


ஆமென்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்

சிறந்த காலங்களில் நம் உலகமானது உறுதி இல்லாத, தலைகீழானதாகத் தோன்றுகிறது. தேவ குமாரனாகிய இயேசு மட்டும் இல்லை என்றால், நமக்கு நம்பிக்கையே இருந்திருக்காது. ஒவ்வொரு கிறிஸ்து பிறப்புத் திருநாளும் - இம்மானுவேல் - தேவன் நம்முடன்...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக நாங்கள் ஆர் சியோனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.wearezion.in

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்