திட்ட விவரம்

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சிமாதிரி

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி

10 ல் 7 நாள்

சுத்தமானவர்கள் பாக்கியவான்கள்

நீங்கள் அதிக மக்கள் நெருக்கம் உள்ள பெரும் நகரங்களில் வசிப்பவர்கள் என்றால், தினமும் போக்குவரத்து நெருக்கடிக்குள் வேலைக்குச் சென்று வருபவர் என்றால், சுத்தமாக இருப்பது எத்தனை கடினமானது என்பது உங்களுக்குத் தெரியும். முடிவே இல்லாத போக்குவரத்து நெருக்கடியும், நம்மை முந்திச் செல்லும் மக்களின் முரட்டுத் தனமும் நம் வாய்களில் இருந்து பெரியதும், தெய்வீகம் இல்லாததுமான வார்த்தைகளைக் கொண்டு வந்துவிடும். வேதத்தின் கர்த்தரை எந்த அளவுக்கு நாம் அதிகம் அறிந்திருக்கிறோமோ அந்த அளவுக்கு, அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது பரிபூரணத்துவத்தை அல்ல, பரிசுத்தத்தை தான் என்பதைப் புரிந்திருப்போம். தங்கம் எவ்வாறாக சுத்திகரிக்கப்படுகிறது என்பதைக் கவனித்திருப்பீர்கள் என்றால். சுத்தமான அந்த உலோகம் கிடைப்பதற்கு எத்தனை நீண்ட காலம் எடுக்கும் என்பதை அறிந்திருப்பீர்கள். சுத்திகரிப்பின் ஒவ்வொரு நிலையும் நீண்டதும் தீவிரமானதும் ஆகும். ஆனால் ஒவ்வொரு நிலையிலும் தங்கத்தின் தூய்மையானது அதிகரித்துக் கொண்டே இருக்கும். இறுதி நிலையில் கிடைக்கும் தங்கம் 99.95% தான் சுத்தமாக இருக்கும். நிச்சயமாக 100% இருக்காது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நாமும் தங்கத்தைப் போல, சுத்திகரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கப்படுகிறோம். இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நம் உடலில் உயிர் இருக்கும் ஒவ்வொரு நாளும் நாம் கிறிஸ்துவின் சாயலில் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். நமது சூழ்நிலைகள், நமது தோல்விகள், நமது மகிழ்ச்சிகள் மற்றும் சோகங்கள் போன்றவை தான் நம்மை சுத்திகரிக்கும் நெருப்பாக இருக்கின்றன. இவற்றின் ஊடாக நாம் கடந்து செல்லும் போது நாம் சிறப்பான, உறுதியான, சுத்தமான நபர்களாக மாறுகிறோம். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பரிசுத்த ஆவியானவரின் புதுப்பிக்கும் பணிக்குத் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் கர்த்தரை அந்தப் பயணத்தில் அனுபவிப்பதால் அவர்களால் கர்த்தரைக் காண முடியும்.  

இன்றே பரிசுத்த ஆவியானவருக்கு உங்களைத் திறந்து கொடுத்து உங்களது இருதயத்தின் ஆழமான பகுதிகளில் அவர் சென்று உங்களில் புதிய பணியைச் செய்ய அனுமதிப்பீர்களா? 

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி

நாம் இப்போது இருக்கும் வாழ்வின் காலம் எதுவாக இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நாம் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த பாதிப்பானது இயேசுவை அனுபவிக்கச் செய்யும் அல்லது, குறைந்தபட்சம் நம்மில் இருக்கும் ...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக நாங்கள் ஆர் சீயோனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.wearezion.in

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்