திட்ட விவரம்

உண்மையாகவே என்னால் பாவ சோதனைகளை மேற்கொள்ள முடியுமா?மாதிரி

Can I Really Overcome Sin and Temptation?

5 ல் 4 நாள்

சோதிக்கப்படும்போது நான் என்ன செய்ய வேண்டும்?


இப்பொழுதே தேவனிடம் கொண்டு செல்லுங்கள்


நீங்கள் சோதிக்கப்படும்போது, தேவன் தந்த இந்த வாக்குத்தத்தத்தை நினைவில் கொள்ளுங்கள்: “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையே அல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடுவது இல்லை. தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையை தாங்கத்தக்கதாக, சோதனையோடுக்கூட அதற்கு தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையையும் உண்டாக்குவார்.” (1 கொரிந்தியர் 10:13).



மேற்கொள்ள பெலன் நமக்கு கொடாமல், தேவன் எந்த ஒரு சோதனையையும் நமக்கு நேரிடப்பண்ணுகிறவர் அல்ல. நம்முடைய சுய பெலத்தாலேயே எளிதில் மேற்கொள்ளக்கூடிய எளிதான சோதனைகளையும் பிசாசு கொடுப்பது இல்லை.



எனவே ஒவ்வொரு முறை சோதிக்கப்படும் போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், தேவனுடைய உதவி இல்லாமல் உங்களால் எந்த சோதனைகளையும் ஜெயிக்க முடியாது.



ஒவ்வொரு சோதனையின் போதும், நம்முடைய பிதாவாகிய தேவனிடம் திரும்புவதை உங்களுடைய பழக்கமாக்குங்கள்.



அவருடைய வல்லமையை கேளுங்கள்.



அவருடைய கரங்களில் விட்டுவிடுங்கள்.



இப்பொழுதே அதை தேவனிடம் கொண்டு செல்லுங்கள்.



விளைவுகளை நினைவில் கொள்ளுங்கள்


நினைவில் கொள்ளவில்லை என்றால்?



நம்முடைய அந்தரங்க பாவங்களை தேவன் நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்: “ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்.” (பிரசங்கி 12:14).



இயேசுவும் நம்மை எச்சரித்திருக்கிறார்: “வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. ஆதலால், நீங்கள் இருளில் பேசினது எதுவோ, அது வெளிச்சத்தில் கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின் மேல் கூறப்படும்.” (லூக்கா 12:2–3).



நாம் பேசும் வார்த்தைகளும் நியாயந்தீர்க்கப்படும்: “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லுகிறேன்.” (மத்தேயு 12:36–37).



எல்லாவிதமான பாவங்களையும் பட்டியளிட்டபின் அப்போஸ்தலனாகிய பேதுரு சொல்லும் வார்த்தைகள்: இவைகளை எல்லாம் செய்கிற “உயிரோடிருக்கிறவர்களுக்கும், மரித்தோர்களுக்கும் நியாயதீர்ப்பு கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.” (1 பேதுரு 4:5).



அவர்களுக்கு என்ன சம்பவிக்கும்?



“அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். ... ஒருவன் கட்டினது வெந்து போனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டு தப்பினதுபோலிருக்கும்.” (1 கொரிந்தியர் 3:13, 15).



தேவனுக்கு பிரியமில்லாத நம்முடைய வார்த்தைகளும் செய்கைகளும் நியாயத்தீர்ப்பு நாளிலே வெளிப்படுத்தப்பட்டு சுட்டெரிக்கப்படும். பரலோக இராஜ்ஜியம் பரிசுத்தமுள்ளதாகையால் இப்படிப்பட்ட மோசமான காரியங்கள் உள்ளே செல்ல முடியாது – அவைகள் சுட்டெரிக்கப்பட வேண்டும்.



பாவ களைகள் பிடுங்கப்பட்டு, வெகுமதி தவறவிடப்படும்.



நீங்கள் சோதனையில் அகப்பட்டு விழுந்ததினால், தேவனிடம் வருவதற்கு உங்கள் மனம் தயக்கம் கொள்ளும்போது, நீங்கள் தேவனிடம் ஓடி வர அதிக தீவிரம் காட்டவேண்டும், அவருடைய சமுகத்தை விட்டு ஓடி ஒளிய முயற்சிக்காதிருங்கள்.



அப்படிப்பட்ட தேவை மிகுந்த தருணங்களில் அவரை நோக்கி ஓடுங்கள்.


நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Can I Really Overcome Sin and Temptation?

"நான் ஏன் அந்த பாவத்தோடு கூட போராடி கொண்டிருக்கிறேன்" என்று என்றைக்காவது உங்களை பார்த்து நீங்களே கேட்டிருக்கிறீர்களா? ரோமர் 7:15 -ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் பாருங்கள்: "நான் விரும்புகிறதை செய்யாமல், நான் வெறுக்கி...

More

இந்த தியான திட்டத்தை எங்களுக்கு அளித்தமைக்கு 'டெனிசன் போரம்' என்ற இணைய பக்கத்திற்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு: http://www.denisonforum.org

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்