திட்ட விவரம்

இயேசுவின் உயிர்த்தெழுதல் உணர்த்தும் சத்தியம்!மாதிரி

What Is Easter All About?

6 ல் 1 நாள்

கதையின் துவக்கம்...



உங்களுக்கு ஒன்று தெரியுமா? கிறிஸ்தவ வரலாற்றிலேயே அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாள், இயேசுவின் உயிர்தெழுதலின் நாள் தான்! இதனை இன்றைய கிறிஸ்தவ உலகின் (வெளியுலகிலும் கூட) அனைத்து சிந்தனையாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக்கொள்வார்கள். ஆம்! உண்மை தான்! ஏனென்று தெரியுமா? 



இது எந்த வகையில் உண்மையென்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால், இயேசுவின் உயிர்த்தெழுதலை குறித்து இன்னும் அநேக காரியங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனது நண்பர் ஜேசன் அவர்களுடைய இந்த ஆங்கில ஒளிப்பதிவை பாருங்கள். கதையின் துவக்கத்தை மிக அழகாக இந்த ஒளிப்பதிவில் அவர் விளக்கியிருக்கிறார்.




"தேவனுக்கு வேறு திட்டங்கள் இருந்தது" அப்படியா? என்னென்ன திட்டங்கள்? மேலும் தெரிந்துகொள்ள நீங்கள் தொடர்ந்து இந்த வேதாகம திட்டத்தை வாசிக்க வேண்டும். எனது நண்பர் ஜேசன் தொடர்ந்து இயேசுவின் உயிர்த்தெழுதலை பற்றி அநேகம் காரியங்களை தனது சொந்த சாட்சியோடு கூட நம்மோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறார். அடுத்த 5 நாட்களில் இயேசுவின் உயிர்த்தெழுதலை பற்றி அநேகம் காரியங்களை தியானிக்க இருக்கிறோம். இயேசுவின் உயிர்த்தெழுதல் உங்களுக்கு இன்று உணர்த்துவது என்ன என்பதையும், தேவனுடைய அந்த பெரிய திட்டத்தில் நீங்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பது பற்றியும் இந்த வேதாகம திட்டத்தின் மூலம் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள போகிறீர்கள்! 



இன்றைய தின தியானத்தில், ஜேசன் உங்களோடு பகிர்ந்து கொண்ட முதல் பகுதியை மறந்துவிடாதீர்கள். அவர் பகிர்ந்ததின் சுருக்கம்:



தேவன் ஆதியிலே பிதா, குமாரனாகிய இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் என்ற தம்முடைய திரித்துவத்திலே ஐக்கியப்பட்டு மகிழ்ந்திருந்தார். இவைகளை புரிந்துகொள்வதோ, கற்பனை செய்து பார்ப்பதோ சற்று கடினம் தான். திரித்துவத்திற்குள் தாம் அனுபவித்து மகிழ்ந்த அந்த ஐக்கியத்தை தம்முடைய படைப்பாகிய மனித குலத்தோடும் பகிர்ந்து கொள்ள விரும்பினார். அவர் படைத்த மனிதர்கள் அவரை நேசிப்பதையும், அவரோடு கூட வாழும் வாழ்க்கையையும் விரும்பி தெரிந்துகொள்வதினால் - திரித்துவ ஐக்கியத்தில் பங்கெடுக்கும் சிலாக்கியத்தையும் அவர்கள் விரும்பினால் பெற்று அனுபவிக்கலாம் என்ற நல்லெண்ணத்தில் தேவன் மனிதர்களை படைத்தார்!  



உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: இயேசுவின் உயிர்த்தெழுதலை குறித்து உங்களுக்கு இருக்கும் கேள்விகள் யாவை? இந்த வேதாகம திட்டத்தை வாசித்து முடித்த பின்னரும் என் மனதில் இது குறித்து சில கேள்விகள் எழும்பலாம். அவ்வாறு எழும்பும் பட்சத்தில், அந்த கேள்விகளை நான் யாரிடம் கேட்கலாம்? இந்த வேதாகம திட்டத்தை என்னோடு கூட வாசிக்க யாரை அழைக்கலாம்?



ஜெபம்: அன்பு தகப்பனே, எங்கள் மீது நீர் பாராட்டும் உமது அன்பிற்காக நன்றி. இந்த அழகான உலகத்தை எங்களுக்காக படைத்ததற்காக நன்றி. எங்கள் வாழ்க்கையில் நீர் எங்களோடு இணைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்காக நன்றி. எங்களுக்கு நீர் கொடுத்த இந்த உலகத்தையும் அதிலுள்ளவர்களையும் நாங்கள் அன்போடு பராமரித்துக்கொள்ள உதவி செய்யும். எங்களை நீர் நேசிக்கும்வண்ணமாகவே நாங்களும் பிறரை நேசிக்க உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.


வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

What Is Easter All About?

ஒருமுறை, தம்முடைய மரணத்தையே ஒருவர் முன்னறிவித்தார். அவர் தமது மரணத்தை அறிவித்தது மட்டுமல்ல, 3 நாட்களில் உயிரோடு எழுந்திருப்பேன் என்றும் அறிவித்தார். ஆம், அவர் தாம் முன்னறிவித்தபடியே மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்