திட்ட விவரம்

வேதாகமத்தை எப்படி வாசிக்க துவங்குவதுமாதிரி

How to Start Reading the Bible

4 ல் 2 நாள்

அனுதின வேதாகம பழக்கத்தை எவ்வாறு துவக்குவது



ஒருபோதும் இரண்டு நாட்களுக்கு பழக்கத்தை கைவிடாதீர்கள். ஒரு நாள் விட்டால் உடனடியாக பழக்கத்திற்குள் வாருங்கள். - ஜேம்ஸ் கிளியர்



இதுவரை அனுதினம் வேதாகமத்தை வாசிக்காவிட்டால், இப்போது வாசிக்க துவங்குவது பெரிய ஒரு பளுவாக இருக்கும். இன்று ஒரு சில எளிய படிகளை எடுத்து இந்த பளுவை நீக்குவோம்.



அனுதின வேதாகம பழக்கத்தை துவக்குவது ஒரே விதமாகத்தான் இருக்கவேண்டும் என்றல்ல. எந்த விதத்தில் அதை துவங்கினாலும், நாம் அதை செய்யும்போது தேவன் நமக்கு வல்லமையான விதத்தில் நமக்கு வெளிப்பாடுகளை தருவார். எல்லோரும் சொல்வதுபோல்: ஒருபோதும் இரண்டு நாட்களுக்கு பழக்கத்தை கைவிடாதீர்கள். தேவன் நம் மீது கோபப்பாடுவார் என்பதற்காக அல்ல — அவர் கோபப்படமாட்டார். ஆனால் அதிகமான நாட்கள் நாம் தவறவிட்டால், சுலபமாக நாம் அந்த பழக்கத்தை விட்டுவிடுவோம். கீழே ஒரு அனுதின வேதாகம பழக்கத்தை கடைபிடிக்க சில வழிமுறைகள் குறிக்கப்பட்டிருக்கின்றன.



புதிய ஏற்ப்பாட்டை வாசியுங்கள்.

புதிய ஏற்ப்பாடு இயேசுவின் வாழ்க்கை வரலாறை கொண்டிருப்பதினால், அது சிறந்த ஒரு துவக்க புள்ளி. பழைய ஏற்ப்பாட்டை பின்னாக சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் துவங்குவதற்கு அல்லது வேதாகமத்திற்கு புதிதானவர்களுக்கு புதிய ஏற்பாடுதான் சிறந்த இடம். மத்தேயுவில் துவங்கி ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம் வாசியுங்கள். வாசிக்கும்போது ஏற்படும் சந்தேகங்கள் கேள்விகளை எழுதிவையுங்கள். ஒரு நண்பரையோ, சபை போதகரையோ கேட்டு சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள்.



ஒரு வேதாகம திட்டத்தை துவங்குங்கள்.

Youversion - இல் அநேக வேதாகம திட்டங்களை வழங்குகிறோம் - இதைப்போல - உங்களுக்கு இந்த பாதையில் உதவ. அநேக வேதத்தில் தேர்ந்தவர்கள் இருக்கிறார்கள், அதன் வரலாறு, அதன் பின்னணி, அது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அனுதின திட்டங்களை தேடி உதவி பெறலாம் walk through the Bible.



வழிநடத்துதலுக்காக ஜெபியுங்கள.

வேதாகமத்தை அனுதினம் வாசிப்பது முதல் படி. அது மிக பெரிய படியும் கூட! ஒவ்வொரு நாளும் வாசித்து அதன் உள் அர்த்தங்களை அறிந்துகொள்ள ஆரம்பிக்கும்பொழுது, தேவன் அதன் விலைமதிப்பில்லாத அர்த்தங்களை உங்களுக்கு காண்பிக்கவேண்டும் என்று ஜெபியுங்கள். தேவன் அவர் சத்தியத்தை வெளிப்படுத்த கேளுங்கள், அதன் மூலம் அவர் வார்த்தையை புரிந்துகொள்ள துவங்குவீர்கள்.



வேதாகமத்தை வாசிக்க விரும்பாத நாட்கள் இருக்கக்கூடும். அநேக காரியங்கள் அவைகளின் பக்கம் நம்மை ஈர்க்கக்கூடும். அநேக நாட்கள் நாம் வாசிக்கக்கூடும் ஆனால் புரிந்துகொள்ளாமல் இருக்கக்கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் என்ன ஆனாலும் சரி என்று நாம் வேதாகமத்தை வாசிக்கவேண்டும். நாம் நம்முடைய செயல்களை உணராமல் இருக்கக்கூடும், ஆனால் நம் உணர்வுகள் நம்முடைய செயல்களை பின்தொடரும்.



இந்த வேதாகமத்தை அனுதினம் வாசிக்கும் பழக்கத்திற்குள்ளாக நீங்கள் படியெடுத்து வைக்கும்பொழுது, நீங்கள் யூகிக்க முடியாத காரியங்களை தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். இந்த முதலீடு அதிக ஆவிக்குரிய லாபத்தை உண்டாக்க ஜெபியுங்கள்.



தியானிக்க




  • அனுதினம் வேதாகமத்தை வாசிக்கிறீர்களா? ஏன்?

  • இனி வரும் 30 நாட்கள் வேதாகமத்தை வாசிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுங்கள். இந்த சவாலை இன்னும் ஒரு நபரோடு சேர்ந்து செய்யுங்கள் (வேதாகம திட்டம் ஒன்றை கூட நண்பரோடு பகிர்ந்து சேர்ந்து வாசிக்கலாம்!)

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

How to Start Reading the Bible

உண்மையை ஏற்றுக்கொள்வோம்.: நாம் வேதாகமத்தை வாசிப்பது நல்லது என்று உணருகிறோம், ஆனால் எங்கு வாசிக்க துவங்குவது என்று தெரியாமல் இருக்கிறோம். இனி வரும் நான்கு நாட்களில், வேதாகமம் ஏன் முக்கியமானது என்றும், எவ்வாறு தினந்தோறும் ...

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்