திட்ட விவரம்

பாதுகாப்பு வேலிகள்: மனஸ்தாபங்களைத் தவிர்த்தல்மாதிரி

Guardrails: Avoiding Regrets In Your Life

5 ல் 3 நாள்

நாம் அனைவருமே பாலியல் ஒழுக்கத்தை நிர்வகிக்க ஒரு பாதுகாப்பு வேலியை நிறுவியிருந்தால் இவர் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கக்கூடும் என்று நாம் நினைக்கும் ஒருவரையோ, நாமே அந்த ஒருவராகவோ, அல்லது அவ்வாறு ஒருவர் நம்மால் வளர்த்தப்பட்டவர்களாகவோ அறிவோம்.



ஆனால் அவ்வாறு ஒரு தடுப்பு அமைப்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பிரபலமான தேர்வு அல்ல. உண்மையில், கலாச்சாரம் நம்மை விளிம்பிற்கு இழுத்து தார்மீக அல்லது நமது நீதிகளின் எல்லைகளின்படி(நாம் அதில் குழப்பமடையும்போது தண்டிப்பதற்கும் வெட்கப்படுத்துவதற்கும்) மட்டுமே தவிர, வேறு எங்கும் ஒரு சிறந்த வேலையைச் செய்யாது. நாம் திருமணத்திற்கு உட்படாத பாலின தவறுகளை மகிமைப்படுத்தும் திரைப்படங்களைப் பார்க்கிறோம், பாடல்களைக் கேட்கிறோம், மற்றும் அது சார்ந்த புத்தகங்களைப் படிக்கிறோம். நாம் எப்போதுமே அதை கொண்டு பொழுதுபோக்குகிறோம். ஆனால் அது உண்மையில் நடக்கும் போது. . . நமக்கு தெரிந்த ஒருவருக்கு இன்னோரு தொடர்பு இருக்கும்போது? நாம் திகைக்கிறோம்.



எனவே, ஒரு சரியான எச்சரிக்கை: தார்மீக பாதுகாப்பு வேலிகளை நிறுவுவதற்கான உங்கள் முயற்சிகளுக்கு எதிராக கலாச்சாரம் செயல்படும். ஆனால் இன்றைய வசனங்களில், அவை ஏன் முக்கியம் என்று அப்போஸ்தலராகிய பவுல் விளக்குகிறார்.



பாலியல் ஒழுக்கக்கேடு தனித்துவமான சேதத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார். உண்மையில், அவர் அதை அதற்குரிய தனிவகைக்குட்படுத்தி "உங்கள் சொந்த உடலுக்கு எதிரான" பாவம் என்று கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சம்பந்தப்பட்ட மற்ற நபருக்கு இது மோசமானது மற்றும் இது உங்களுக்கும் மோசமானது. மேலும், நீங்கள் ஒருபோதும் இதன் விளைவுகளிலிருந்து தப்பிப்பதில்லை. நீங்கள் நிதி ரீதியாக முழுமையாக மீண்டுவிடுவீர்கள். நீங்கள் கல்வியில் கூட முழுமையாக மீண்டுவிட முடியும். ஆனால் பாலியல் பாவம் என்று வரும்போது, ​​அது வேறுபட்டது.
மன்னிப்பு? முற்றிலும் உண்டு. தேவன் உங்களை ஏற்றுக்கொள்வதற்கும் உங்களை நேசிப்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாலியல் பாவத்துடனான பிரச்சனை இதுவே, நடந்ததை மாற்றியமைக்க முடியாது.



எனவே, பவுலின் ஆலோசனை என்ன? "தப்பி ஓடுதல்....



ஒவ்வொரு கணவரும் தனது மனைவி செய்யவேண்டும் என்று விரும்புவது இதுவே இல்லையா? ஒவ்வொரு மனைவியும் தன் கணவர் எதை செய்ய விரும்புகிறார்? ஒவ்வொரு சகோதரனும் தனது சிறிய சகோதரி என்ன செய்ய விரும்புகிறார்? "பாலியல் ஒழுக்கக்கேட்டில் இருந்து தப்பி ஓடுவதையே."அல்லவா?



அந்த தனிப்பட்ட வேலிகளை எவ்வாறு அமைப்பது? இயேசு பாவத்தை, எவ்வாறு வரையறுத்தார் என்பதைக் கருத்தில் கொள்வோம் மற்றும் பாலியல் பாவத்திற்கு இது எவ்வாறு பொருந்தும் என்பதையும் பார்ப்போம். இயேசு தனது ஊழியம் முழுவதும், மற்றவர்களுக்கு எது சிறந்ததோ அதுவே சிறந்தது என்று போதித்தார். அப்படியானால் இதற்கு குறைவாயிருக்கும் எதுவும் பாவமே. எப்போது நான் என்னைமுன்னிறுத்தி உங்களுக்கு தீங்கிழைக்கிறேனோ, அது பாவம். அதுபோல எப்போது நீங்கள் உங்களை முன்னிறுத்தி என்னை என் தீங்குக்கு என்று நீங்கள் விட்டாலும், அது பாவம்.



எனவே, நமது பாலுணர்விற்கான வேலிகள் மற்ற நபருக்கு சிறந்தது அல்லாத எதையும் செய்யாமல் இருக்க நம்மை தடுக்க வேண்டும். அது அவர்களுக்கு வெட்கத்தை ஏற்படுத்துமா? இது அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர் சுமக்கும் ரகசியமாக மாறுமா? இது அவர்களின் எதிர்கால உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துமா? அப்படியானால், பவுல் சொல்வது போல், "தப்பி ஓடுங்கள்".


வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Guardrails: Avoiding Regrets In Your Life

நமது வாகனங்கள் ஆபத்தான அல்லது வரம்புக்கு மீறிய பகுதிகளுக்குச் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு அதன் தேவை ஏற்படும் வரை நாம் அவைகளை கண்டுகொள்வது இல்லை - ஆனால் பின்னர் அவைகள் அங்கு இருந்ததற்காக நாம...

More

நார்த் பாய்ன்ட் ஊழியங்களுக்கும் ஆண்டி ஸ்டான்லி அவர்களுக்கும் இந்த திட்டத்தை வழங்கியமைக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல்கள் பெற, பார்க்கவும்: https://www.anthology.study/anthology-app

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்