திட்ட விவரம்

கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!மாதிரி

கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!

5 ல் 5 நாள்

கசப்பு ஆவிக்கு மாற்று மருந்து என்ன?


கசப்புத் தன்மையை எதிர்க்க ஒரே பரிகாரம் ஒரு மரத்தில் இருந்து வருகிறது.


பழைய ஏற்பாட்டில் யாத்திராகமம் 15:23 - இல் இஸ்ரவேல் புத்திரர் மாராவுக்கு வந்தபோது, அங்கே தண்ணீர் கசப்பாக இருந்ததால், அதைக்குடிக்க முடியாமல் போயிற்று என்று பார்க்கிறோம். அப்போது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார். அதை அவன் தண்ணீரில் போட்டதும், அது இனிப்பாக மாறியது.  கசப்பு என்கிற உலகிலே சிலுவை மரம் குறுக்கிடும்போது வாழ்க்கை இனிதாகி விடும்.


இயேசு கிறிஸ்துவின் சிலுவை நம் வாழ்க்கையில் உள்ள எல்லா கசப்பையும் வேரோடு களைந்து எடுக்கும் தேவ அன்புக்கு அடையாளமாக இருக்கிறது. “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும் படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.” ( 2 கொரிந்தியர் 5:21)


பெரும்பாலான தவறுகளை மன்னிக்க அல்ல, அனைத்து தவறுகளையும் மன்னிக்கவே ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.  அதைப்போல எபிரேயர் 12:15 - இல் பெரும்பாலான கசப்புத் தன்மையை குறித்து மட்டும் எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்லாமல் யாதொரு கசப்பினாலும் நாம் தீட்டுப்படாதப்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்கிறார்.


மொத்த கேக் மாவில் 2% எலி விஷம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட கேக்கில் ஒரு துண்டை ஒருவர் உங்களுக்கு வழங்கி, “ உனக்கு ஒன்று வேண்டுமா?” என்று கேட்டால், விஷம் ஒரு சிறிய சதவிகிதத்தில் இருந்தபோதிலும்,  யாரும் அந்த கேக் துண்டை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 


விஷம் எந்த அளவில் இருக்கிறது என்பது முக்கியமல்ல.  சிறிய விஷம் தான் என்றாலும் விஷம் விஷம் தான். அது மிக ஆபத்தானது.


நம்மைக் கேக்குக்கும், கசப்புத் தன்மையை எலி விஷத்துக்கும் ஒப்பிடலாம்.     “கசப்புத்தன்மை என்பது விஷத்தை குடித்துவிட்டு அடுத்த நபர் சாவதற்கு காத்திருப்பது போன்றது” என்று ஒருவர் கூறினார்.  நமக்குள் இருக்கும் கசப்பானது நம்மைக் கொன்றுவிடுகிறது.


கசப்பின் விஷத்தன்மைக்கு ஒரே பரிகாரம் கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் மன்னிப்பின் அருமையை நினைவில் கொண்டிருப்பதே. 


மன்னிப்பு என்பது ஒரு வினைச்சொல், அது ஒரு உணர்ச்சியல்ல.  மன்னிப்பு நாம் உறுதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை ஆகும். அது நாம் வெறும் உணருகின்றதொன்றோ அல்லது ஜெபிக்க வேண்டியதொன்றோ இல்லை. மேலும் நாம் முரண்பாடு கொண்டவரிடம் போய் அவரை மன்னித்த பின் தான் நமக்குள்ளே சமாதானம் வரும். அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களோ,  இல்லையோ,  நீங்கள் அவர்களை மன்னித்து விட்டதும் உங்களுடைய ஆத்துமாவில் தேவ சமாதானம் கிட்டும். 


மக்கள் தங்கள் முழங்கால்களை மடக்கி நம்மை அணுகும் போது நாம் அவர்களுக்கு கொடுப்பது மன்னிப்பு அல்ல. மேலும்,  ‘நாம் சரி,  அவர்கள் செய்தது தான் தவறு’ என இறுதியில் உணர்ந்து,  மன்னிப்புக்காக நம்மிடம் வேண்டி நிற்கும் வேளையில் நாம் மக்களுக்கு அளிப்பது மன்னிப்பு அல்ல. ஆனால் மன்னிப்பு, மக்களுடைய குறைகளை மனதில் கொள்ளாமல் அவர்களுடன் நாம் கொள்ளும் மனப்பான்மையே ஆகும். கசப்புத் தன்மையை நாம் தொடர்ந்து கொண்டிருந்தால் அது நம்மையே புண்படுத்துமே ஒழிய, மற்றவர்களை அல்ல. 


 நீ சிலுவை அண்டையில் வந்து,  உன் மன்னிப்பைப் பெற்றுக் கொண்டது உண்டா?  நீ உடனே எழுந்து உனக்கு அநீதி இழைத்தவருக்கு கிறிஸ்துவின் மன்னிப்பை வழங்கு.  கசப்பிலேயே தொடர்ந்து வளர்ந்து உன்னையே கொன்று விடாதே.


மேற்கோள்:  “கொடுப்பது மன்னிப்பு,  அதனால் பெறுவது வாழ்க்கை”  - ஜார்ஜ் மேக்டோனால்ட்


 ஜெபம்: கர்த்தாவே,  நீர் சிலுவை மூலம் எனக்கு அருளிய மன்னிப்பு தான் மற்றவர்களுக்கு நான் மன்னிப்பு அளிக்க என்னை செயல்படுத்துகிறது என்பதை நான் உணருகிறேன். சிலுவை அண்டையில் வந்து, இந்த மன்னிப்பை நான் பெற்றுக்கொள்ள எனக்கு உதவி புரியும். ஆமென்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!

அகித்தோப்பேல் தாவீது ராஜாவின் ஒரு நம்பிக்கையான ஆலோசகராக இருந்தான். ஆனால், அவனுக்கு இருந்த கசப்புத் தன்மையால் அப்சலோமின் சதித்திட்டத்துடன் ஒருங்கிணைந்து தாவீதுக்கு துரோகம் செய்தான். இறுதியில் தற்கொலை செய்து தன் உயிரை ...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக விஜய் தங்காவை நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.facebook.com/ThangiahVijay

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்