வேதாகமத்தை எப்படி படிப்பது (அடிப்படைகள்)மாதிரி

சிறந்த வேதாகம ஆய்வு உருமாற்றத்தை ஏற்படுத்துகிறது
"நலிபடவல்லவர்களாக இருக்க விரும்புபவர்கள் மர்மங்களுக்கு மத்தியே நடமாடுகிறார்கள்." - தியோடர் ரோத்கே
கற்பனை செய்து பாருங்கள் நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரிடம் செல்கிறீர்கள் என்று. ஆனால் வெப்பமானியை சரியான முறையில் (வாயில், காதில் அல்லது நெற்றியில் வைத்து) பயன்படுத்துவதற்குப் பதிலாக, அது உங்கள் கையில் வைக்கப்படுகிறது. பின்னர் சில வினாடிகளில், செவிலியர் அதை எடுத்து உங்கள் வெப்பநிலை சரியாக இருப்பதாகக் கூறுகிறார்.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்? நிச்சயமாக அது சரியாகத் தெரியும், ஏனெனில் நீங்கள் அதை சரியான முறையில் பயன்படுத்தவில்லை.
அந்த சூழ்நிலையில், அந்த முறையில் பயன்படுத்தப்படும்போது, வெப்பமானியால் அதைச் சுற்றியுள்ள அறையின் வெப்பநிலையை மட்டுமே அளவிட முடிந்தது. வெப்பமானி உடைந்துவிட்டது அல்லது செயல்திறன் இல்லாமல் போனது என்று அர்த்தமல்ல. அது சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான்.
அதேபோல், நாம் வேதாகமத்தை முழங்கை தூரத்தில் வைத்திருக்கும்போது, அணுக காத்திருக்கும் ஆழமான வல்லமை, சத்தியம் மற்றும் வாழ்க்கையை நாம் தவறவிடுகிறோம். வேதாகமம் தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்த தேர்ந்தெடுத்த முதன்மையான வழிகளில் ஒன்றாகும். தேவன் கருதிய எல்லாவற்றையும் பெற்று, அவற்றாக இருந்து, செய்ய வேண்டுமென்றால், அது சரியான கருவிகள் மற்றும் நோக்கங்களுடன் வேதாகமத்தை அணுகுவதில் தொடங்குகிறது.
எனது சொந்த கிறிஸ்தவ பயணத்தில், பயனுள்ள (மற்றும் உருமாற்றமளிக்கும்) வேதாகம ஆய்வுக்கான ஏழு தூண்கள் இவை:
- சூழலைப் புரிந்துகொள்வது.
- பழக்கத்தை உருவாக்குவது.
- மனப்பாடம் செய்வதை பயிற்சி செய்வது.
- சரியான கருவிகளைப் பயன்படுத்துவது.
- சமூகத்தில் கற்றுக்கொள்வது.
- பிரார்த்தனையை ஒருங்கிணைப்பது.
- நலிபடவல்லக்கூடிய தன்மையை நாடுவது.
உங்கள் சொந்த பயணத்தில் கூட்டிணைக்க இந்த ஏழு வழிகளை விட மேலும் பல இருக்கலாம். நான் சாத்தியமென நினைத்ததற்கும் அப்பால் வளர இவை எனக்கு உதவியுள்ளன, உங்களுக்கும் அதே போல் செய்யும் என நம்புகிறேன்.
நீங்கள் தேவனுடைய வார்த்தையை வெறியுள்ள பேரார்வத்துடன் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்பி ஜெபிக்கிறேன். இறுதியாக, அது உண்மையிலேயே உங்கள் பாதைக்கு விளக்காகவும், உங்கள் பாதையில் ஒளியாகவும் மாறும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

வேதாகமத்தைப் பொறுத்தவரை சமாளிக்க முடியாது போலவும், போதிய தகுதி இல்லாததாகவும், தொலைந்து போனது போலவும் உணர்வது மிகவும் எளிது. வெற்றிகரமான வேதாகம படிப்பின் முக்கியமான மூன்று நியமங்கள் மற்றும் சில வழிகளை உங்களுக்கு கற்பிப்பதன் மூலம் வேதாகமத்தை படிப்பதை உங்களுக்கு எளிதாக்குவதே எனது நோக்கம். வெறும் தகவலுக்காக மட்டுமின்றி வாழ்வை உருமாற்றும் எவ்வாறு வேதாகமத்தை வாசிக்கலாம் என்பதை கண்டறிய இன்றே இந்த திட்டத்தில் சேருங்கள்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ஆண்டவர் சர்வவல்லவர்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
