திட்ட விவரம்

கிறிஸ்து பிறப்பின் காட்சிமாதிரி

The Nativity Scene

4 ல் 3 நாள்

முற்காலங்களில் ரோமப்பேரரசானது ஒரு போரின் வெற்றியையோ, ஒரு புதிய சமாதான உடன்படிக்கையையோ, அல்லது புதியப் பேரரசரின் பிறப்பையோ கொண்டாடும்போது, அவர்கள் அந்த நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்கும்பொருட்டு தூதுவர்களை அனுப்புவதுண்டு. எந்த ஒரு சமூக ஊடகமோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ அக்காலத்தில் இல்லாததால் இந்த தூதுவர்களின் வேலை மிகமுக்கியமானதாய் இருந்து வந்தது.



ரோமர்களின் காலத்தில் வாயினால் அறிவிப்பதின் மூலமே நற்செய்திகள் பரவி வந்தன. இந்த ரோமர்களால் ஆளப்பட்ட இஸ்ரவேல் தேசத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இப்பொழுது பார்ப்போம். அமைதியான ஒரு சிறு கிராமத்தில், நள்ளிரவு வேளையில், வயல்வெளியின் மத்தியில் தங்கியிருந்த ஒரு மேய்ப்பர்களின் கூட்டம், கடுங்குளிரில் இருந்தவாறே, தங்களுடைய மந்தையைக் கவனித்துக் கொண்டிருந்தது. திடீரென, கர்த்தருடைய மகிமையின் ஒளி இருண்ட வானத்தை விடியற்கால வெளிச்சத்தைப்போல் பிரகாசிக்கச் செய்தது, தேவதூதர்களின் கூட்டமொன்று தோன்றி புதிய ராஜா பிறந்திருக்கும் நற்செய்தியை அறிவித்தது.



அவர் ஒரு ரோமப் பேரரசர் அல்ல, ஆனால் அவர் இந்த முழு உலகத்திற்குமான ஒரு இரட்சகர். 



செய்தியைக் கேட்ட மாத்திரத்தில், அந்தக் குழந்தையைப் பார்க்கும்படிக்கு அவர்கள் தீவிரமாய் ஓடினார்கள். இயேசுவை சந்தித்தப் பின்பு, அவர்கள் கிராமமெங்கும் போய் தங்களுக்கு சொல்லப்பட்ட சங்கதியை எல்லோருக்கும் பிரசித்தம் பண்ணினார்கள். 



மேய்ப்பர்களுக்குக் கிடைத்த அதே நற்செய்தி நமக்கும்கூட கிடைத்திருக்கிறது, முழுஉலகிற்குமான இரட்சகர் வந்திருக்கிறார் என்ற இந்த அற்புதமான செய்தியினால் நாமும்கூட நெருக்கி ஏவப்பட வேண்டும். இயேசு பிறந்த நற்செய்தியை நள்ளிரவு வேளையில் பிரசித்தம்பண்ண மேய்ப்பர்கள் வெட்கப்படவில்லை. இயேசுவின் பிறப்பை மட்டுமல்ல, அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலையுங்கூட உலகிற்கு அறிவிக்கும்படியான வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கின்றது. ரோமப்பேரரசின் தூதுவர்கள் மற்றும் மேய்ப்பர்களைப் போல, நாமும் நமக்குத் தெரிந்தவர்கள், மற்றும் நம்மை சுற்றியுள்ளவர்களிடம் தம்முடைய குமாரனைப் பற்றிய நற்செய்தியைப் பிரசித்தம் பண்ணவேண்டுமென்று தேவன் நம்மிடம் கேட்கிறார். 



சிந்தனைக்கான கேள்விகள்:



இயேசுவைக் குறித்த நற்செய்தியை மக்களிடம் சொல்வதற்கு, மேய்ப்பர்களிடம் அன்று இல்லாத என்னென்ன வசதிகள் இன்று நம்மிடம் இருக்கின்றன?



நீங்கள் ஜெபிக்கவும், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளவும் கூடியவிதத்தில் உங்களைச் சுற்றிக் காணப்படும் மூன்று நபர்கள் யார் யார்? அதைக் குறித்து இப்பொழுது ஜெபியுங்கள்.


நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

The Nativity Scene

கிறிஸ்துவ குடும்பங்கள் அநேகர் இயேசுவின் பிறப்பை சித்தரிக்க கிறிஸ்து பிறப்பின் காட்சியை வீடுகளில் அமைப்பதுண்டு. பெரும்பாலும் நாம் மரியாள், யோசேப்பு, மேய்ப்பர்கள், ஆடுகள் மற்றும் ஞானிகள் அந்த தொழுவத்தின் முன்னணையில் உள்ள ச...

More

யூத் கமிஷன் இன்டர்நேஷனல் அவர்களுக்கு இத்திட்டத்தினை வழங்கியமைக்காக எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய http://yciclubs.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்