செக்ஸ்மாதிரி

ஆபாசம் மற்றும் காம இச்சைகளுக்கான வாய்ப்பு எல்லா இடங்களிலும் உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஆபாசப் படத்தைப் பெற பெரிய முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. இப்போது அதை ஒரு கணினி மூலமாகவோ அல்லது டிவி தொலைக் கட்டுப்பாட்டுக்கருவியை சொடுக்குவதின் மூலமாகவோ பார்த்துவிட முடியும். சுயஇன்பம், காமம் மற்றும் அசுத்தமான பாலியல் பொறிக்குள் விழுவது அவ்வளவு எளிதானது. வேதாகமம் இந்த விஷயங்களை பற்றி ஏதாவது சொல்லுகிறதா? ஒருவரையொருவர் எப்படி நடத்துவது என்பதை பற்றி ஆண்டவரின் எண்ணங்கள் யாவை? சுயஇன்பம் பற்றி வேதாகமம் அதிகம் சொல்லவில்லை, ஆனால் பாலியல் தூய்மையையும் காம உணர்வையும் பற்றி சில தெளிவான கொள்கைகளை வழங்குகிறது. இப்படிப் பட்ட விஷயங்களில் மாற நீங்கள் முடிவு செய்தால், செய்யக்கூடிய சிறந்த விஷயம், உங்கள் போராட்டத்தைப் பற்றி யாரிடமாவது சொல்ல வேண்டும். அதுவே மேற்கொள்ள எளிதான வழி.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

பாலியல் எல்லா இடங்களிலும் இருக்கிறது. சுயஇன்பம், காமம், பாலியல் தூய்மை ஆகிய வலையில் விழுவது மிகவும் எளிது. நாம் நம்மைத் தூயவராக, அவருடைய ஆவியின் மீது நம்பிக்கை வைத்து, தன்னடக்கத்தை வளர்த்துக்கொள்ள கர்த்தர் எதிர்பார்க்கிறார். இந்த ஏழு நாள் திட்டம் தூய்மையான பாதையில் உங்களை நடத்தி, கர்த்தரின் தரத்தில் வாழத் துவக்கும். உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரைக் கண்டறிந்து, இந்த பத்திகளை சேர்ந்து கவனியுங்கள், ஏனென்றால் பாலியல் நேர்மையில் பொறுப்புணர்வு முக்கியம். மேலும் பயனுள்ள உள்ளடக்கத்திற்கு, காண்க finds.life.church
More
இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்.