திட்ட விவரம்

உங்களது மிகச்சிறந்த முதலீடு!மாதிரி

உங்களது மிகச்சிறந்த முதலீடு!

5 ல் 4 நாள்

“உங்கள் அறிவை விஸ்தரியுங்கள்”


தேவனுடைய வார்த்தையைப்   புரிந்துகொள்ளுதலில் வளர்வது என்பது வாழ்நாள் முழுக்கத் தொடரும் முயற்சி. ஒரே   நாளிலே நிகழ்ந்துவிடாது. ஆனால், சில வழிமுறைகளைக் கைக்கொண்டால், புரிந்துகொள்ளுவதை சற்று எளிதாக ஆக்கும். சில   சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளுகிறோம்:


1. சில உபகரணங்களை வாங்கிக்கொள்ளுங்கள் – நீங்கள் வாசிக்கும்   பகுதியைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவும் சில வேதபாட உதவிநூல்கள் உண்டு.   உதாரணமாக, வேதபாட வேதாகாமங்கள், ஒத்தவாக்கிய விளக்கவுரை புத்தகம், மற்றும் கருப்பொருள்களின் அடிப்படையில் வேதாகமக்   கருத்துக்களைக் கற்றுக்கொள்ள உதவும் நூல்கள் என்று அச்சிலும், இணையத்திலும் கிடைக்கின்றன.


2. வேதபாடக் குழுக்களிலோ   அல்லது சிறு குழுக்களிலோ பங்கு கொண்டு மற்றக் கிறிஸ்தவர்களோடு பழகி, அவர்கள்து வாழ்வில் எவ்வாறு தேவ வார்த்தையைக் கைக்கொள்ளுகிறார்கள்   என்று கவனியுங்கள்.


3. வேதவாசிப்புத் திட்டம்   ஒன்றைக் கைக்கொள்ளுங்கள் – தனிப்பட்ட வாசிப்பில் அக்கறை கொண்டவர்களுக்கு உதவும்   பல வாசிப்புத்திட்டங்கள் யூவெர்ஷனில் (வேதாகமச் செயலி) கிடைக்கின்றன. இவை நீங்கள்   வேதம் முழுவதையும் கிரமமாய் வாசித்துமுடிக்க உதவும். இவைகளில் அனேகத் திட்டங்கள், ஒரு வருடத்தில் வேதம் முழுவதையும் வாசித்துமுடிக்க வழிகாட்டும்.   சுருங்கக்கூறினால், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். 


எவ்வளவு அதிக நேரத்தை வேதத்தை வாசிப்பதில்   செல்விடுகிறீர்களோ, அவ்வளவாய் உங்கள் வேத அறிவு   விரிந்துகொண்டேயிருக்கும். உங்கள் வாழ்வின் நிகழ்காலச் சூழலுக்குத் தேவையான   ஆலோசனைகளையும் தேவன் வேதவாசிப்பு மூலமாக தெளிவு படுத்துவார்.



வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

உங்களது மிகச்சிறந்த முதலீடு!

சரியான முதலீடுதான் செழிப்பான வருவாயைக்கொண்டு வருவதற்கு   ஆதார காரணம். நீங்கள் கிறிஸ்தவராயிருந்தால், கிரமமாய்   தேவனுடைய வார்த்தையை உட்கொள்வது தவிர விசுவாசத்தில் சிறப்பான முதலீடு வேறெதுவும்   செய்ய முடியாது. தேவனுடைய வார்...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க:http://www.twenty20faith.org/yvdev2

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்