நம்பிக்கை
நம்பிக்கையின் குரல்
நம்பிக்கையின் குரல்' - என்னும் நிகழ் ச்சியினை தொடர் ந்து கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். 'Voice of hope' an audio series of encouragement and hope for a time such as this. Listen and be blessed!
புதிய ஏற்பாட்டினைப் படியுங்கள்
இந்த திட்டம் ஒரு வருடத்தில் புதிய ஏற்பாட்டினை முழுமையாக படிக்க உங்களுக்கு வழிகாட்டும்.
விசுவாசம் vs பயம்
இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது நம்மை பயத்திலிருந்து வெளியேறி விசுவாசம் நிறைந்த வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்க உதவி செய்யும். பயத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது? மற்றும் தேவனுடைய வாக்குத்தங்களின் மூலமாக நம் விசுவாச வாழ்க்கையை எப்படி மேம்படுத்துவது? என்பதை பற்றியும் இங்கே நாம் தெளிவாக காணலாம்.
வருகையின் ஆராதனை
நம்பிக்கை, அன்பு, சமாதானம், களிப்பு. பண்டிகை காலங்களில் இவ்வார்த்தைகள் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் ஏன் என நமக்கு ஞாபகம் இருக்கிறது? கிறிஸ்துமஸின் கதை, கர்த்தர் வரலாற்றில் எவ்வாறு இயேசுவின் பிறப்பு மூலம் இடைபட்டார் என்பதன் கதையாகும். மரியாள், யோசேப்பு மற்றும் மேய்ப்பர்களின் வாழ்வுகள் இந்த நிகழ்வின் மூலம் முற்றிலும் மாற்றப்பட்டது. இவர்கள் நம்பிக்கை, அன்பு, சமாதானம் மற்றும் களிப்பை கண்டுகொண்டனர்; இயேசுவின் வழியாக இவற்றை எவ்வாறு நாமும் கண்டடையலாம் என்பதை நினைவுகூறலாம்.
உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்
இந்தத் தலைப்பில் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இயேசு இந்த பூமியில் இருந்தபோது அவர் செய்த அருட்பணியின் பெரும்பகுதியானது சுகமாக்குதலாகத் தான் இருந்தது. இந்த வேதாகமப் பாடத்திட்டத்தை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் ஆழமான முழுமையான சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்படி சுகத்தை மாபெரும் பரம வைத்தியர் மட்டுமே கொடுக்க முடியும்
உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்
சண்டை சச்சரவுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன; அதற்காக, கசப்பான மற்றும் முறிந்த உறவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல. ஆனாலும் மற்றவர்களுடனான நமது உறவை நாம் சரிசெய்து குணப்படுத்துவதற்கு முன்பு, ஆண்டவருடனான நமது உறவை அவர் குணப்படுத்த நாம் இடங்கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தில், ஒப்புரவு என்ற அற்புதத்தை இயேசு எவ்வாறு செய்கிறார் என்பதைப் பார்க்க உங்களை அழைக்கிறோம். மனந்திரும்புதல், பரிகாரம் மற்றும் மன்னிப்பு ஆகிய அடிப்படைக் காரியங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் சண்டை சச்சரவை சமாளிப்பதைத் தாண்டி விடுதலை மற்றும் குணமடைதலுக்குக் கடந்து செல்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இந்தத் திட்டத்தின் மூலம் உறவில் உள்ள சிக்கல்களை எவ்வாறு கண்டறிவது என்பதைப் புரிந்துகொண்டு, நல்ல தீர்வுகளைக் கண்டறிந்து, மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகிய செயல்முறைகளின் வாயிலாக உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுவீர்கள்.
இயேசு ஏன் பிறந்தார்
Why Jesus was born? இயேசு ஏன் பிறந்தார்? இது சிந்திப்பதற்கு மிகவும் எளிய கேள்வியாக தோன்றலாம். இந்த வருஷம் நீங்கள் கிறிஸ்து பிறப்பு நாட்களுக்கு ஆயத்தமாகும்போது, உங்கள் வாழ்க்கைக்கும், முழு உலகத்திற்குமான, இயேசு பிறப்பின் ஆழமான அர்த்தத்தையும், நோக்கத்தையும் சிந்தித்து பாருங்கள். இந்த 5 நாட்கள் தியானம் ஸ்காட் ஹோசி என்பவரால் எழுதப்பட்டது, மேலும் நம்பிக்கை வார்த்தை என்ற தியானத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி.
மீண்டும் தொடங்கவும்
புத்தாண்டு. ஒரு புதிய நாள். புதிய தொடக்கங்களின் தேவன் தாம் என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காகவே தேவன் இந்த மாற்றங்களைப் படைத்தார். தேவன் தன்னுடைய வார்த்தையினால் உலகத்தை கொண்டு வரமுடியும் என்றால், அவர் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையின் இருளில் பேச முடியும், உங்களுக்கு ஒரு புதிய தொடக்கம் உருவாகும். நீங்கள் புதிய தொடக்கங்களை நேசிக்கவில்லையா! இந்த வாசிப்பு திட்டத்தைப் போலவே. துய்த்து மகிழ்!
ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது
இந்த காலை நேர தியான பகுதிகள், உங்களை உற்சாகப்படுத்தி தேவனோடு அதிகமாக நேரத்தை செலவு செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும். மேலும் அப்படி அவருடன் நீங்கள் அதிக நேரம் செலவு செய்யும் போது, அது அவருடனான உங்கள் உறவை வலுப்படுத்தும்.