சங்கீதம் 106:9-13

சங்கீதம் 106:9-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர் செங்கடலை அதட்டினார், அது வறண்டுபோயிற்று; அவர்களை ஒரு காய்ந்த தரையில் நடத்திச் செல்வதுபோல் அதின் வழியே நடத்தினார். அவர் அவர்களை எதிரிகளின் கைகளிலிருந்து காப்பாற்றினார்; பகைவரின் கையிலிருந்து அவர்களை மீட்டுக்கொண்டார். அவர்களுடைய எதிரிகளை வெள்ளம் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் உயிர் தப்பவில்லை. அப்பொழுது அவருடைய மக்கள் அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள். ஆனாலும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவாய் மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்கவில்லை.

சங்கீதம் 106:9-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் சிவந்த கடலை அதட்டினார், அது வற்றிப்போனது; காய்ந்த தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகச்செய்தார். பகைவரின் கைக்கு அவர்களை விலக்கிக் காப்பாற்றி, எதிரியின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார். அவர்களுடைய எதிரிகளைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீதியாக இருக்கவில்லை. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள். ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்காமல்

சங்கீதம் 106:9-13 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவன் கட்டளையிட்டார், செங்கடல் வறண்டு போனது. ஆழமான கடலினூடே, பாலைவனத்தைப் போன்ற உலர்ந்த தரையின்மேல் தேவன் நம் முற்பிதாக்களை வழிநடத்தினார். தேவன் நமது முற்பிதாக்களை அவர்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார். அவர்கள் பகைவரிடமிருந்து தேவன் அவர்களைப் பாதுகாத்தார். தேவன் அவர்கள் பகைவர்களைக் கடலால் மூடினார். அவர்கள் பகைவர்களில் ஒருவன் கூட தப்பவில்லை. அப்போது நம் முற்பிதாக்கள் தேவனை நம்பினார்கள். அவர்கள் அவருக்குத் துதிகளைப் பாடினார்கள். ஆனால் நம் முற்பிதாக்கள் தேவன் செய்த காரியங்களை விரைவில் மறந்துபோனார்கள். அவர்கள் தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்கவில்லை.