2 கொரிந்தியர் 6:2 - Compare All Versions

2 கொரிந்தியர் 6:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஏனெனில், அவர் சொன்னதாவது: “என் தயவின் காலத்தில் நான் உங்களுக்கு செவிகொடுத்தேன். இரட்சிப்பின் நாளிலே நான் உங்களுக்கு உதவி செய்தேன்.” நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்பொழுதே இறைவனது தயவின் காலம். இப்பொழுதே இரட்சிப்பின் நாள்.

2 கொரிந்தியர் 6:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

சரியான காலத்திலே நான் உன் வார்த்தையைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே சரியான காலம், இப்பொழுதே மீட்பின் நாள்.

2 கொரிந்தியர் 6:2 TAERV (பரிசுத்த பைபிள்)

“நான் சரியான சமயத்தில் உன்னைக் கேட்டேன். இரட்சிப்புக்கான நாளில் நான் உதவி செய்தேன்” என்று தேவன் கூறுகிறார். அவர் சொன்ன “சரியான நேரம்” என்பது இதுதான் என்று உங்களுக்குக் கூறுகிறேன். “இரட்சிப்புக்கான நாளும்” இதுதான்.

2 கொரிந்தியர் 6:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.