1 பேதுரு 2:6 - Compare All Versions
1 பேதுரு 2:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில்: “இதோ, சீயோனிலே ஒரு கல்லை வைக்கிறேன். அது தெரிந்துகொள்ளப்பட்டதும் உயர் மதிப்புள்ளதுமான ஒரு மூலைக்கல். அவரைச் சார்ந்து இருக்கிறவன் ஒருபோதும் வெட்கத்திற்குள்ளாவது இல்லை” என்று வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
1 பேதுரு 2:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியே: “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருக்கிறவன் வெட்கப்படுவது இல்லை” என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
1 பேதுரு 2:6 TAERV (பரிசுத்த பைபிள்)
வேதவாக்கியம் சொல்கிறது, “பாருங்கள், நான் ஒரு விலையுயர்ந்த கல்லைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அக்கல்லை சீயோன் என்னுமிடத்தில் வைத்தேன். அவரை நம்புகிற மனிதன் எப்போதும் வெட்கமுறுவதில்லை.”
1 பேதுரு 2:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அந்தப்படியே: இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.