சகரியா 5
5
பறக்கும் புத்தகச் சுருள்
1மீண்டும் நான் பார்த்தபோது, அங்கே பறக்கும் புத்தகச் சுருள் ஒன்றைக் கண்டேன்.
2அந்தத் தூதன் என்னிடம், “நீ என்ன காண்கின்றாய்?” என்று கேட்டான்.
நான், “பறக்கும் புத்தகச் சுருள் ஒன்றைக் காண்கின்றேன். அது இருபது முழ நீளமும், பத்து முழ அகலமுமாயிருக்கிறது#5:2 நீளம் 30 அடி, அகலம் 15 அடி அல்லது நீளம் 9 மீற்றர், அகலம் 4.5 மீற்றர்” என்றேன்.
3அப்போது அவன் என்னிடம், “அது நாடெங்கும் பரவிச் செல்கின்ற சாபம். அதன் ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடி, திருடுகிற ஒவ்வொருவனும் நாட்டை விட்டுத் துரத்தப்படுவான். மறுபக்கத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடி, பொய்யாக ஆணையிட்டுக் கூறுகின்ற ஒவ்வொருவனும் நாட்டை விட்டுத் துரத்தப்படுவான். 4சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றதாவது, ‘நான் இதை வெளியே அனுப்புவேன்; அப்போது அது திருடனின் வீட்டிலும், என் பெயரில் பொய்யாக ஆணையிட்டுக் கூறுகின்றவனின் வீட்டிலும் நுழையும். அது அவன் வீட்டில் தங்கியிருந்து, அந்த வீட்டையும் அதன் மரவேலைப்பாடுகளையும் கற்களையும் முற்றிலும் அழிக்கும்’ ” என்றான்.
கூடைக்குள் பெண்
5பின்பு என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன் என்னிடம் வந்து, “அங்கே புறப்பட்டு வருவதை நோக்கிப் பார்” என்றான்.
6“அது என்ன?” என்று நான் அந்தத் தூதனைக் கேட்டேன்.
அதற்கு அவன், “அது அளவிடும் ஒரு கூடை#5:6 கூடை – எபிரேய மொழியில் எப்பா” என்றான். மேலும் அவன், “இது நாடெங்கும் உள்ள மக்களின் அக்கிரமம்#5:6 அக்கிரமம் அல்லது தோற்றம்” என்று பதிலுரைத்தான்.
7அதற்குப் பின்பு அதன் ஈயமூடி திறக்கப்பட்டது. அந்த கூடைக்குள் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். 8அப்போது அந்தத் தூதன், “இவளே அந்த அக்கிரமம்” எனக் கூறி, அவளைத் திரும்பவும் கூடைக்குள் தள்ளி, அதன் வாயை ஈயமூடியால் அடைத்தான்.
9அதன் பின்னர் நான் மேலே பார்த்தேன். அங்கே எனக்கு முன்னால் இரண்டு பெண்கள் தங்கள் சிறகுகளை விரித்துக் காற்றோடு வருவதைக் கண்டேன். நாரையின் சிறகுகளைப் போன்ற சிறகுகள் அவர்களுக்கு இருந்தன; அவர்கள் அந்த கூடையை பூமிக்கும் வானத்துக்கும் இடையில் உயரத் தூக்கினார்கள்.
10“அவர்கள் கூடையை எங்கே தூக்கிக்கொண்டு போகின்றார்கள்?” என்று என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம் நான் கேட்டேன்.
11அதற்கு அவன், “சிநெயார்#5:11 சிநெயார் அல்லது பாபிலோனியர் நாட்டில் அதற்கு ஒரு கோயில் கட்டியெழுப்பப் போகின்றார்கள். அது கட்டியெழுப்பப்பட்டதும், கூடை அதற்குரிய இடத்தில் வைக்கப்படும்” என்றான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சகரியா 5: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.