மல்கியா 1:6
மல்கியா 1:6 TRV
“ஒரு மகன் தன் தந்தையையும், ஒரு வேலைக்காரன் தன் எஜமானையும் கௌரவப்படுத்துகின்றான். நான் ஒரு தந்தையாயிருந்தால், எனக்குரிய கௌரவம் எங்கே? நான் ஒரு எஜமானாயிருந்தால், எனக்குரிய மரியாதை எங்கே?” என சேனைகளின் கர்த்தர் உங்களிடம் கேட்கின்றார். மதகுருக்களே, நீங்கள் அல்லவா என்னுடைய பெயரை அவமதிக்கின்றீர்கள். ஆனால், “உம்முடைய பெயரை நாங்கள் எவ்வாறு அவமதித்தோம்?” என நீங்கள் கேட்கின்றீர்கள்.


