லூக்கா 4:5-8

லூக்கா 4:5-8 TRV

பிசாசு அவரை உயரமான ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று, ஒரு நொடியில் உலகத்தின் அனைத்து இராச்சியங்களையும் அவருக்குக் காண்பித்தான். பிசாசு அவரிடம், “இவை எல்லாவற்றினது அதிகாரத்தையும், மாட்சிமையையும் நான் உமக்குத் தருவேன். ஏனெனில் இவை எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நான் விரும்பினால் இவற்றை எவருக்கும் கொடுக்க என்னால் முடியும். எனவே நீர் என்னை ஆராதித்தால், இவையெல்லாம் உமக்குச் சொந்தமாகும்” என்றான். அதற்கு இயேசு, “ ‘உன் இறைவனாகிய ஆண்டவரை ஆராதித்து, அவரை மட்டுமே வழிபடுவாயாக’ என்று எழுதியிருக்கின்றதே” என்று பதிலளித்தார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக்கா 4:5-8