யாத்திராகமம் 37
37
உடன்படிக்கைப் பெட்டி
1அதன் பின்னர் பெசலெயேல் சித்தீம் மரத்தினால் ஒரு பெட்டியைச்#37:1 பெட்டியை – உடன்படிக்கைப் பெட்டி செய்தான். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமும் உடையதாயிருந்தது.#37:1 சுமார் 3 3/4 அடி நீளம், 1 1/4 அடி அகலமும் உயரமும் அல்லது 1.1 மீற்றர் நீளம், 68 சென்ரிமீற்றர் அகலமும் உயரமும். 6ம் வசனத்திலும் உள்ளது. 2அதை உள்ளும் புறமும் சுத்தத் தங்கத் தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்கத்தினாலான ஒரு வார்ப்படத்தை அமைத்தான். 3அவன் அதற்கென நான்கு தங்க வளையங்களைச் செய்து, ஒரு பக்கத்துக்கு இரு வளையங்களும், மற்றைய பக்கத்துக்கு இரு வளையங்களுமாக அதன் நான்கு கால்களிலும் இணைத்தான். 4சித்தீம் மரத்தினால் தடிகளைச் செய்து, அவற்றைத் தங்கத் தகட்டால் மூடினான். 5பெட்டியைச் சுமப்பதற்கு அதன் பக்கங்களிலுள்ள வளையங்களில் தடிகளைக் கொழுவி வைத்தான்.
6அதன் பின்னர் அவன் கிருபாசனத்தை சுத்தத் தங்கத்தினால் அமைத்தான். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருந்தது. 7கிருபாசனத்தின் முனைகளிலும், அடித்துச் செய்யப்பட்ட தங்கத் தகட்டால் இரு கேருபீன்களைச் அமைத்தான். 8ஒரு பக்கத்தில் ஒரு கேருபீனையும், மறுபக்கத்தில் இன்னொரு கேருபீனையும் அமைத்தான். அவை கிருபாசனத்தின் இரண்டு முனைகளிலும் ஒரே தகடாய் இருக்கும்படி அமைத்தான். 9அந்தக் கேருபீன்களின் சிறகுகள் கிருபாசனத்தை மூடியவாறு மேல் நோக்கி விரித்து, ஒன்றுக்கொன்று எதிராக கிருபாசனத்தை நோக்கி நின்றன.
மேசை
10பெசலெயேல்#37:10 பெசலெயேல் – சில பிரதிகளில் அவர்கள் என்றுள்ளது. சித்தீம் மரத்தினால் ஒரு மேசையைச் செய்தான். அது இரண்டு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமுமாய் இருந்தது. 11பின்பு அவன் அதைச் சுத்தத் தங்கத் தகட்டால் மூடி, சுற்றிலும் தங்கத்தினாலான ஒரு வார்ப்படத்தை அமைத்தான். 12அதைச் சுற்றிலும் விரற்கடை அளவு#37:12 விரற்கடை அளவு – சுமார் 3 அங்குலம் அல்லது 7.5 சென்ரிமீற்றர் ஒரு சுற்றுச் சட்டத்தைச் செய்து, அதன்மேல் தங்கத்தினாலான ஒரு வார்ப்படத்தை அமைத்தான். 13பின்பு மேசைக்கென நான்கு தங்க வளையங்களைச் செய்து, அவற்றை அதன் கால்கள் இருக்கும் நான்கு மூலைகளிலும் பொருத்தினான். 14மேசையைச் சுமக்கும் தடிகளைக் கொழுவுவதற்காக இந்த வளையங்கள் மேசையின் சுற்றுச் சட்டத்துக்கு அருகே இருந்தன. 15மேசையைச் சுமப்பதற்கான தடிகளை சித்தீம் மரத்தினால் செய்து அவற்றைத் தங்கத் தகட்டால் மூடினான். 16மேசையில் இருக்கும் பாத்திரங்களான நறுமணத்தூளுக்கான தட்டுக்கள், கிண்ணங்கள், காணிக்கைகளையும் பானபலிகளையும் ஊற்றுவதற்கான செம்புகள், சாடிகள் ஆகியவற்றைத் சுத்தத் தங்கத்தினால் செய்தான்.
குத்துவிளக்கு
17அவன் குத்துவிளக்கின் அடிப்பாகம், தண்டுகள், அதன் பூ வடிவமான கிண்ணங்கள், மொட்டுக்கள், பூக்கள் ஆகிய எல்லாவற்றையும் அடிக்கப்பட்ட சுத்தத் தங்கத்தினால் செய்தான். 18குத்துவிளக்கின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும், மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக ஆறு கிளைகள் பிரிந்து சென்றன. 19அதன் ஒரு கிளையின்மேல் வாதுமை வடிவமான மூன்று கிண்ணங்கள் மொட்டுக்களுடனும், பூக்களுடனும் இருந்தன. மற்றைய கிளையின்மேலும் அவ்வாறே அமைக்கப்பட்டிருந்தன. அவ்விதமாக குத்துவிளக்கிலிருந்து பிரிந்து செல்லுகின்ற அதன் ஆறு கிளைகளிலும் அமைக்கப்பட்டிருந்தன. 20குத்துவிளக்கின் உச்சியில் வாதுமைப் பூ வடிவமான நான்கு கிண்ணங்கள் மொட்டுகளுடனும், பூக்களுடனும் அமைக்கப்பட்டிருந்தன. 21குத்துவிளக்கிலிருந்து புறப்படுகின்ற முதலாவது சோடிக் கிளையின் கீழ் ஒரு மொட்டும் இரண்டாவது சோடிக் கிளையின் கீழ் இரண்டாவது மொட்டும், மூன்றாவது சோடிக் கிளையின் கீழ் மூன்றாவது மொட்டுமாக அமைக்கப்பட்டிருந்தன. அதற்கு எல்லாமாக ஆறு கிளைகள் இருந்தன. 22மொட்டுக்களும் கிளைகளும் குத்துவிளக்குடன் ஒரே வடிவமைப்பாக சுத்தத் தங்கத் தகட்டை அடித்து செய்யப்பட்டிருந்தன.
23அதன் ஏழு அகல் விளக்குகளையும், அதன் திரிவெட்டிகளையும், அவற்றை வைப்பதற்கான தட்டுகளையும் சுத்த தங்கத்தினால் செய்தான். 24குத்துவிளக்கையும் அதற்கான அனைத்து உபகரணங்களையும் ஒரு தாலந்து#37:24 ஒரு தாலந்து – சுமார் 75 ராத்தல் அல்லது 34 கிலோ கிராம் நிறையான சுத்தத் தங்கத்தினால் செய்தான்.
தூபபீடம்
25பெசலெயேல் தூபபீடத்தை சித்தீம் மரத்தினால் செய்தான். அது ஒரு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும் உடைய சதுரமாகவும், இரண்டு முழம் உயரம் உடையதாகவும் இருந்தது.#37:25 சுமார் 1 1/2 அடி நீளமும் அகலமும், 3 அடி உயரம் அல்லது 45 சென்ரிமீற்றர் நீளமும் அகலமும், 90 சென்ரிமீற்றர் உயரம் அதன் கொம்புகள், அதனோடு இணைத்து அமைக்கப்பட்டிருந்தன. 26மேசையின் மேற்பக்கத்தையும், அதன் எல்லாப் பக்கங்களையும், கொம்புகளையும் சுத்தத் தங்கத் தகட்டால் மூடி, சுற்றிலும் தங்கத்தினால் ஒரு வார்ப்படத்தை அமைத்தான். 27தூபபீடத்தைச் சுமப்பதற்கான தடிகளை கொழுவுவதற்கென தங்கத்தினாலான வார்ப்படத்துக்குக் கீழே எதிர்ப்பக்கங்கள் இரண்டிலும் ஒரு பக்கத்துக்கு இவ்விரண்டு தங்க வளையங்களை அமைத்தான். 28அத்தடிகளை சித்தீம் மரத்தினால் செய்து, தங்கத் தகட்டால் மூடினான்.
29அவன் பரிசுத்த அபிஷேக எண்ணெயையும், சுத்தமான நறுமணத்தூளையும் நறுமணத் தைலம் தயாரிப்பவன் செய்வது போல் செய்தான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யாத்திராகமம் 37: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.