அவர்கள் மாரா என்னும் இடத்துக்கு வந்தபோது, அந்த இடத்திலுள்ள தண்ணீர் கசப்பாயிருந்தபடியால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனாலேயே அந்த இடம் மாரா என அழைக்கப்பட்டது. எனவே இஸ்ரயேல் மக்கள், “நாங்கள் எதைக் குடிப்போம்?” என்று கேட்டு மோசேக்கு எதிராக முணுமுணுத்தார்கள். மோசே கர்த்தரை நோக்கிக் கதறினான், அப்போது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார். அவன் அதைத் தண்ணீருக்குள் எறிந்தபோது, தண்ணீர் இனிப்பாக மாறியது. கர்த்தர் அங்கே ஒரு விதிமுறையையும், ஒரு சட்டத்தையும் ஏற்படுத்தி, அவர்களைப் பரீட்சித்தார்.
வாசிக்கவும் யாத்திராகமம் 15
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யாத்திராகமம் 15:23-25
5 நாட்கள்
அகித்தோப்பேல் தாவீது ராஜாவின் ஒரு நம்பிக்கையான ஆலோசகராக இருந்தான். ஆனால், அவனுக்கு இருந்த கசப்புத் தன்மையால் அப்சலோமின் சதித்திட்டத்துடன் ஒருங்கிணைந்து தாவீதுக்கு துரோகம் செய்தான். இறுதியில் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொண்டான். மனக்கசப்பு உன்னைக்கொல்ல விடாதபடி, அதன் காரணங்களையும், குணப்படுத்தும் முறையையும் இந்த ஐந்து நாட்கள் தியானப்பகுதியில் படித்து பயன் பெறுங்கள்.
7 நாட்கள்
இந்தத் தலைப்பில் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இயேசு இந்த பூமியில் இருந்தபோது அவர் செய்த அருட்பணியின் பெரும்பகுதியானது சுகமாக்குதலாகத் தான் இருந்தது. இந்த வேதாகமப் பாடத்திட்டத்தை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் ஆழமான முழுமையான சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்படி சுகத்தை மாபெரும் பரம வைத்தியர் மட்டுமே கொடுக்க முடியும்
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்