சங்கீதம் 27:7-14

சங்கீதம் 27:7-14 TAOVBSI

கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச் செய்யும். என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று. உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும். என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்ளுவார். கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும். என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள். நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன். கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 27:7-14

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27   - சகோதரன் சித்தார்த்தன் சங்கீதம் 27:7-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

4 நாட்களில்

காலையில் கண் விழிக்கும் போது - நேற்றைய தின கவலைகளைப் பார்க்கின்றீர்களா? அல்லது இன்றைய நாளின் – புதிய தேவ கிருபையை உற்று நோக்குகின்றீர்களா? ஒவ்வொருநாளும் நாம் நெருக்கத்திற்கா அல்லது விசுவாசத்திற்கா? எதற்கு முதலிடம் தருகிறோம். ”என்கையிலஒன்னும் இல்லை” என்பதை விட யாவும் தேவன் - அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்ற அறிவுடன் செயல்படுகின்றோமா? கர்த்தர் என் வெளிச்சம் – யாருக்குப் பயப்படுவேன் (சங்கீதம் 27:1) சொல்லிப்பாருங்கள் உங்கள் இருள், சந்தேகம் விலகி ஓடும். கர்த்தர் என் இரட்சிப்பு என்னும் போது உங்கள் நம்பிக்கையிழந்த சூழ்நிலை மாறி – பெலவீனத்தில் பெலன் உண்டாகும். இந்த சங்கீதம் தேவன் அவர் ஏதோ தூரத்தில் இருந்து நம்மை பார்த்துக்கொண்டு இருப்பவர் அல்ல- அவரே எனது கோட்டை. நிலையற்ற உலகில் எனது அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவே என்று யோசிக்கச் சொல்கிறது. நெருக்கத்திலே நாம் அவரை அழைக்கலாம் - வாங்க!