பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான். அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனை செய்கிறான். அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான். ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
வாசிக்கவும் நீதிமொழிகள் 6
கேளுங்கள் நீதிமொழிகள் 6
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: நீதிமொழிகள் 6:12-19
31 நாட்கள்
பழமொழிகள் என்பது நீண்ட அனுபவங்களிலிருந்து வரையப்பட்ட குறுகிய வாக்கியங்கள், அவை நினைவில் கொள்ள எளிதான வழியில் உண்மையைக் கற்பிக்கின்றன - ஞானமான முடிவுகளை எடுக்க உதவும் உண்மைகள். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளின் வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் பழமொழிகளின் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்