பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும், சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும், ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும், தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே. விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு. அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும். போர்க்குதிரையும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்கக்கூடாத ராஜாவுமே. நீ மேட்டிமையானதினால் பைத்திமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு. பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.
வாசிக்கவும் நீதிமொழிகள் 30
கேளுங்கள் நீதிமொழிகள் 30
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: நீதிமொழிகள் 30:24-33
4 நாட்கள்
உலகம் உருவான காலத்திலிருந்து தொற்றுப்பரவல், இயற்கை சீற்றங்கள், போர்கள் அல்லது போரின் வதந்திகள் எங்கும் எப்போதும் இருந்து வருகின்றன... ஆனால் உனக்கு, நித்திய தெய்வீக அடைக்கலம் உண்டு. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டவருக்குள் அடைக்கலம் புகுவதை பற்றியும் அவரை நம் வாசஸ்தலமாக மாற்றிக்கொள்வதை பற்றியும் கற்றுக்கொள்ள போகிறோம். ஆண்டவரின் வார்த்தையிலிருந்து உனக்கு ஆழமான வெளிப்பாடுகள் கிடைத்து உன் ஆத்துமா ஊக்குவிக்கப்பட்டு திருப்தியடைய வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.
31 நாட்கள்
பழமொழிகள் என்பது நீண்ட அனுபவங்களிலிருந்து வரையப்பட்ட குறுகிய வாக்கியங்கள், அவை நினைவில் கொள்ள எளிதான வழியில் உண்மையைக் கற்பிக்கின்றன - ஞானமான முடிவுகளை எடுக்க உதவும் உண்மைகள். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளின் வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் பழமொழிகளின் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்