உடனே, அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதறவெட்டினான். இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள். ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள். அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான்.
வாசிக்கவும் மாற்கு 14
கேளுங்கள் மாற்கு 14
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: மாற்கு 14:43-52
4 நாட்களில்
எங்களின் "ஈஸ்டர் இஸ் தி கிராஸ்" டிஜிட்டல் காம்பைங் மூலம் ஈஸ்டரின் உண்மையான உணர்வை அனுபவிக்கவும், லுமோ ஈஸ்டர் திரைப்படங்களில் இருந்து ஊக்கமளிக்கும் வீடியோகள் மூலம் இயேசுவின் கதையை ஆராய இந்த சிறப்பு நிகழ்ச்சி உங்களை அழைக்கிறது, தனிப்பட்ட சிந்தனை, அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது. இயேசுவின் வாழ்க்கை, ஊழியம் மற்றும் பேரார்வம் ஆகியவற்றை சிறப்பித்துக் காட்டும் உள்ளடக்கத்துடன், இந்த திட்டம் பல மொழிகளில் வழங்கப்படுகிறது, ஈஸ்டர் சீசன் முழுவதும் நம்பிக்கை மற்றும் மீட்பின் செய்தியில் பகிர்ந்து கொள்ள அனைத்து பின்னணியிலிருந்தும் மக்களை ஒன்றிணைக்கிறது.
7 நாட்களில்
கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது" என்ற எங்கள் டிஜிட்டல் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் கிறிஸ்மஸின் உண்மையான உணர்வை அனுபவிக்க முடியும். இந்த சிறப்பு நிகழ்ச்சி லுமோ கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் எழுச்சியூட்டும் காட்சிகள் மூலம் இயேசுவின் கதையை ஆராய்கிறது. தனிப்பட்ட சிந்தனை, அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. பல மொழிகளில் வழங்கப்படும், இது கிறிஸ்துமஸ் சீசன் முழுவதும் இந்த மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொள்ள அனைத்து பின்னணியிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கிறது.
8 நாட்களில்
14 நாட்களில்
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்