மத்தேயு 6:9-18

மத்தேயு 6:9-18 TAOVBSI

நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 6:9-18

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன் மத்தேயு 6:9-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

5 நாட்களில்

அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....